அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Ethirneechal Serial: சின்னத்திரை தொலைக்காட்சிகளின் சீரியல்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல்தான். நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் மக்ககளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சினிமா பிரபலங்கள் கூட இந்த சீரியலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது இந்த சீரியல்.

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம், இந்த கதையில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். ஆதி குணசேகரன், நந்தினி, ரேணுகா, ஜனனி, ஈஸ்வரி, கரிகாலன், ஜான்சி ராணி என அத்தனை கேரக்டர்களுமே அவரவர் கதாபாத்திரத்தை எதார்த்தமாக நடித்து நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறார்கள்.

Also Read:ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

மக்களால் இந்த சீரியலில் அதிக கவனத்தை பெற்றிருப்பது ஆதி குணசேகரன் தான். அவருடைய நடிப்புக்காகவே இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் நிறைய பேர் உண்டு. . வில்லத்தனத்திலும், காமெடி கலந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு இவர் தான் மிக முக்கிய காரணம் என சொல்லிக் கொண்டிருந்தபோது, இவரை விட மெயின் கேரக்டர் ஒருத்தர் உள்ளே இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழில் ஒரு சில சீரியல்களில் நடித்து மக்களிடையே பரீட்சையமான இந்த நடிகை தான், தற்போது சன் டிவியின் டிஆர்பி இந்த அளவுக்கு மேலே வந்ததுக்கு காரணமாக இருக்கிறார். இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த கோலங்கள் சீரியலில் அபியின் தங்கையாக வரும் ஆர்த்தி கேரக்டரில் நடித்த ஸ்ரீவித்யா தான் இந்த நடிகை. இவர் சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

Also Read:ஊத்தி மூடப்பட்ட பாரதிகண்ணம்மா.. பிக்பாஸிடம் சரணடைந்த நடிகை

கோலங்கள் சீரியலில் பாசிடிவ் கேரக்டரில் நடித்த ஸ்ரீவித்யா, அதற்கு அடுத்து தென்றல் சீரியலில் நெகடிவ் ரோலிலும் பட்டையை கிளப்பினார். தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் வசனகர்த்தாவாக இருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் பெரிய வெற்றிக்கு காரணம் அதில் இடம்பெறும் வசனங்கள் தான் என்பதை எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு கேரக்டரும் பேசும் வசனங்களுக்காகத்தான் மக்கள் அந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.

இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருப்பது ஸ்ரீவித்யா தான். இவருடைய வசனங்கள் இல்லை என்றால், எதிர்நீச்சல் சீரியலும் மக்களால் பத்தோடு, பதினொன்றாக மறக்கப்பட்டு இருக்கும். வசனங்களின் மூலம் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து, இந்த கேரக்டர் இப்படித்தான் பேசும் என மக்களுக்கு பிடிக்க வைத்து, தற்போது சீரியலை வெற்றி கொடி நாட்ட வைத்திருக்கிறார் முன்னாள் சீரியல் நடிகை ஸ்ரீ வித்யா.

Also Read:ஒரே வருடத்தில் கணவனை இழந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.. மரண பயத்தை காட்டிய காரணம்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்