சிவாஜியை உதாசீனப்படுத்திவிட்டு எம்ஜிஆரிடம் சென்ற பிரபலம்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்

இப்போது சிவகார்த்திகேயன், தனுஷ் தலைமுறை வந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் படங்களை தற்போது வரை மறக்க முடியாத அளவுக்கு அவர்கள் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். அந்த காலத்தில் இவர்களது படம் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்போது விஜய் மற்றும் அஜித் இடையே ஒரு பிளவு உள்ளது. அதாவது விஜய்க்கு என்று ஒரு குறிப்பிட்ட இயக்குனர்கள் உள்ளார்கள். விஜய் பட இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் போன்றவர்கள் அஜித் படத்தை இயக்க தயக்கம் காட்டி வருகிறார்கள். அதேபோல் விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வினோத் போன்றவர்கள் அஜித்தின் படங்களை தான் இயக்கி வருகிறார்கள்.

Also Read : அப்பா, மகனுடன் நெருக்கமாக நடித்த 2 நடிகைகள்.. 56 வயதில் 22 வயசு ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்த சிவாஜி

இவ்வாறு இரண்டு நடிகர்களுக்கு இடையே தனித்தனியான இயக்குனர்கள் வைத்துள்ளனர். அதேபோல் தான் அந்த காலத்தில் சிவாஜி படங்களை இயக்கி வந்தவர் ஏபி நாகராஜன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

ஏ பி நாகராஜன் சிவாஜிக்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிவாஜியை உதாசீனப்படுத்திவிட்டு எம்ஜிஆர் படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போதுதான் அவரது நிலைமை தலைகீழாக மாறியது.

Also Read : சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

அதாவது சிவாஜி இடம் பணியாற்றும்போது இவர் நாற்காலியில் அமர்ந்து தான் வேலை செய்வார். சிவாஜியும் அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பார். ஆனால் எம்ஜிஆர் படங்களில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருமே கைகட்டி தான் நிற்க வேண்டும். அதேபோல் தான் எம்ஜிஆர் முன்னாள் நாகராஜ் கைகட்டி நின்றுள்ளார்.

இதைப் பார்த்த படக்குழுவினர் சிவாஜி இடம் எப்படி இருந்த மனுஷன் இப்போது எம்ஜிஆரிடம் பணிந்து போய்விட்டார் என பேசி உள்ளனர். ஆனால் ரஜினி, கமலை பொருத்தவரையில் இரண்டு பேருக்குமே மாற்றி மாற்றி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படம் கொடுத்து வந்தனர்.

Also Read : சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்.. வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த நடிகர் திலகம்

- Advertisement -spot_img

Trending News