ஒரே போட்டோவால் தலைவரை பங்கம் செய்த ப்ளூ சட்டை.. இது என்ன லால் சலாமுக்கு வந்த சோதனை

Blue Sattai Maaran-Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் இன்று ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக பார்க்கப்பட்ட இப்படம் ரஜினி நடிக்கிறார் என்றதுமே பரபரப்பு செய்தியாக மாறியது.

ஆனால் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் வருகிறார் என்ற செய்தி கொஞ்சம் சோர்வடைய வைத்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக மட்டும்தான் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் சூப்பர் ஸ்டார் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னால் முடிந்த ப்ரமோஷனை செய்தார்.

மேலும் டிரெய்லர், போஸ்டர் என ஒவ்வொன்றும் ரஜினியை முன்னிறுத்தியே செய்யப்பட்டது. அதனால் படம் நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணையும் என்ற கருத்து கணிப்புகளும் வெளியானது. ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோ மொத்தத்தையும் காலி செய்து இருக்கிறது.

Also read: சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

அதன்படி பிரபல பத்திரிக்கை ஒன்று லால் சலாம் படத்திற்கு டிக்கெட் எதுவும் எதிர்பார்த்த அளவு புக் ஆகவில்லை என தெரிவித்திருக்கிறது. அதை அப்படியே போட்டோவாக வெளியிட்டு இருக்கும் ப்ளூ சட்டை மாறன் காளியோட ஆட்டம் காலியான கூட்டம் என கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

தலைவரை பங்கம் செய்த ப்ளூ சட்டை

lal salaam-booking
lal salaam-booking

மேலும் ரஜினி படத்திற்கு என ஒரு மாஸ் பட ரிலீஸ் அன்று இருக்கும். ஆனால் லால் சலாம் படத்திற்கு அப்படி இல்லை என்றும் பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருக்கிறது என்றும் அவர் நக்கல் அடித்துள்ளார். இதற்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

இது ரஜினி படமே கிடையாது. அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார் என்று தற்போது கமெண்டுகள் பறந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வந்தால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அது மட்டுமல்லாமல் வார இறுதி நாளில் நிச்சயம் இப்படம் வசூல் வேட்டையாடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மகளைப் பார்த்து பூரித்துப் போய் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு.. லால் சலாம் வெற்றி பெறுமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்