எதிர்பார்த்து ஏமாந்து வெளியேறிய அனன்யா.. ஒரு வாரத்திற்கு பிக் பாஸில் வாங்கிய சம்பளம்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட ஒரே வாரத்தில் முதல் ஆளாக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். ஒரு வாரத்திற்கு மட்டும்  அனன்யாவிற்கு விஜய் டிவி எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மற்ற சீசன்களை காட்டிலும் இரண்டு வீடுகள், புது விதிமுறை என ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தது.

அது மட்டுமல்ல இதுவரை நடந்த சீசன்களிலும் முதல் வாரத்தில் எவிக்சன் ப்ராசஸ் நடக்காது. ஆனால் இந்த சீசன் 7ல் முதல் வாரமே நாமினேஷன் பிராசஸை தொடங்கிவிட்டனர். ஒரு டாஸ்க் கூட வைக்காமல் அவர்களின் திறமையை அறியாமல் இப்படி பண்றாங்களே என ரசிகர்களும் திட்டி தீர்த்தனர். 

Also Read: இனி ஒரு நிமிஷம் பிக் பாஸ் வீட்டில இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய கமலின் செல்லம்

எதிர்பாராத விதமாய் அனன்யா குறைந்த ஓட்டுக்களை மக்களிடமிருந்து பெற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் மட்டுமல்ல அனன்யாவும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. பவா செல்லத்துரை தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேற போகிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அதிரடி திருப்பமாக அனன்யா பெயரை கமல் காட்டியதும் எல்லோருக்கும் தூக்கி வாரி போட்டுருச்சு.

மேடையிலும் கமல் முன்பு அனன்யா, ‘நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன் ஆனா இப்படி நடந்திருச்சு’ என ஏமாற்றத்துடன் பேசினார். இவர் வெறும் ஒரே வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கு  கை தேய தேய சப்பாத்திகளை சுவையாக சுட்டுக் கொடுத்தவர்.

Also Read: நானும் ரவுடிதான் என காமெடி பண்ணும் கோமாளி.. உக்கிரமாக மாறிய பிக்பாஸ் வீடு

மேலும் விசித்ரா இவருடைய டாட்டூவை குறித்து விமர்சித்த போது, அதை பகிரங்கமாக சொல்லி  தப்பை சுட்டிக்காட்டினார். இவ்வளவு போல்டாக இருந்த அனன்யா இன்னும் கொஞ்ச நாட்கள்  இருந்திருக்கலாம் என ரசிகர்களும் இப்போது நினைக்கின்றனர்.

இவரிடம் பிக் பாஸ் வீட்டில் 1 நாளைக்கு மட்டும் இருப்பதற்கு 12,000 ரூபாயை சம்பளமாக பேசியிருக்கின்றனர். ஏழு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனன்யாவிற்கு மொத்தமாக 84 ஆயிரத்தை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

Also Read: பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்