நானும் ரவுடிதான் என காமெடி பண்ணும் கோமாளி.. உக்கிரமாக மாறிய பிக்பாஸ் வீடு

Biggboss 7: இது ரத்த பூமி என்ற ரேஞ்சில் முதல் வாரமே ரணகளமாக இருந்த பிக்பாஸ் வீடு இப்போது உக்கிரமாக மாறி இருக்கிறது. அதிலும் ப்ரோமோவில் இடம் பிடிப்பதற்காக போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு சண்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.

அப்படித்தான் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் அமுல் பேபி விஷ்ணு நானும் ரவுடிதான் என கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதைப் பார்ப்பதற்கு கோமாளித்தனமாக தான் இருக்கிறது. நேற்று அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Also read: ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. புதுசா குண்டைத் தூக்கிப் போட்ட வனிதாவின் 2வது புருஷன்

இந்நிலையில் இந்த வார கேப்டனான சரவண விக்ரமை விஷ்ணு பெயர் சொல்லி கூப்பிடு என சண்டை போட்டு பிரச்சனையை தொடங்கி வைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அவரை உட்கார வைத்து ஒரு மீட்டிங் போட்டு நீங்க கேப்டனா இல்ல பதினோரு பேரும் கேப்டனா, உங்ககிட்ட ஆளுமை இல்ல என வாதிடுகிறார்.

உடனே பிரதீப் சப்போர்ட் செய்ய வரும் நிலையில் விஷ்ணு இங்க டீமாக தான் பேசணும், இல்லனா வெளியில கிளம்பு என அவரிடமும் சண்டைக்கு பாய்கிறார். அதை கேப்டன் சொல்லட்டும் என பிரதீப் மல்லு கட்ட நான் தான் சொல்லுவேன் என்று ஓவர் கெத்து காண்பித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டியை டம்மி பீஸ் ஆக மாற்றுகிறார்.

Also read: பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

மேலும் கேம் உனக்கு ஆடத் தெரியல பெரிய இது மாதிரி பேச வந்துட்டியா எனவும் வார்த்தையை விடுகிறார். இப்படி ரணகளமாக வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த அமுல் பேபி மூஞ்சுக்குள்ள இப்படி ஒரு வில்லனா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும் இதெல்லாம் செட்டே ஆகல ஸ்மால் பாஸ் வீட்டுக்கு வந்த கடுப்பில் அவர் தேவையில்லாமல் பிரச்சனையை ஆரம்பிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆக மொத்தம் வேண்டுமென்றே கேப்டனை வம்புக்கு இழுக்கும் விஷ்ணு இந்த வாரம் இன்னும் என்னென்ன அலப்பறை செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

Also read: டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்