பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

Jovika-Vanitha: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஜோவிகா முதல் வாரமே தனது பங்குக்கு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதாவது தனக்கு படிப்பு வரவில்லை அதனால் தனக்கு விருப்பமுள்ள துறையை தேர்ந்தெடுத்து உள்ளதாக ஜோவிகா ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.

இதற்கு பலரும் ஆதரவு கொடுத்த நிலையில் நடிகை விசித்ரா ஆரம்ப கல்வி மிகவும் முக்கியம் என விவாதித்த நிலையில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால் கோபமடைந்த ஜோவிகா சற்று கடுமையாக பேசி இருந்தார். அவர் பக்கம் நியாயம் இருந்த போதும் பக்குவமாக இதை எடுத்து சென்று இருந்தால் கண்டிப்பாக ஜோவிகாவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும்.

Also Read : மோந்து பார்த்தாலே போதும், சோலி முடிஞ்சு.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லும் ரட்சிதா

இந்த சூழலில் தனது மகள் ஜோவிகாவுக்கு ஆதரவாக வனிதா யூடியூபில் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஜோவிகா படிப்பு தவறானது என்று எப்போதும் கூறவில்லை. படிப்பு வரவில்லை என்றாலும் அதிலேயே இருக்க வேண்டாம் தனக்குத் திறமை எதில் இருக்கிறதோ அதில் செல்லலாம் என்று தான் கூறுகிறார் என வனிதா பேசி இருந்தார்.

மேலும் பிக் பாஸ் மூலம்தான் தனது மகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது இல்லை. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே கதாநாயகியாக ஜோவிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இரு படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

Also Read : டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

ஆனாலும் பிக் பாஸ் என்பது மிகப்பெரிய மேடை. 18 வயதில் தன்னம்பிக்கையோடு தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் கவலை இல்லை என்று ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கிறார். தான் சம்பாதித்து அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஜோவிகா இந்த வயதில் முடிவெடுத்து இருக்கிறார் என வனிதா பெருமையாக பேசி இருந்தார்.

மேலும் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு படங்களில் நடிக்க உள்ளாராம். ஆரம்பத்தில் வனிதாவும் கதாநாயகியாக படங்களில் நடித்த நிலையில் சில காரணங்களினால் அதன் பிறகு சினிமாவை தொடர முடியாமல் போய்விட்டது. இப்போது அவரது வாரிசு சினிமாவில் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் வனிதா இருக்கிறார்.

Also Read : டிஆர்பியில் பெருத்த அடி வாங்கிய விஜய் டிவி சீரியல்.. மட்டமாக உருட்ட போகும் செகண்ட் பார்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்