படம் ஓடலன்னாலும் அலட்டல் மட்டும் குறையல.. ஓவர் தலைகனத்தில் ஆடும் உயர்ந்த நடிகை

Gossip: ஹீரோயின்கள் என்றாலே கொஞ்சம் கெத்து காட்டுவார்கள் தான். ஆனால் இதெல்லாம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகைகளுக்கு பொருந்தும். ஆனால் எந்த படமும் ஓடாமல் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட நடிகை ஒருவர் ஓவர் ஆட்டம் போடுகிறாராம்.

உயர்ந்த நடிகையான இவர் நடிக்க வந்த வேகத்திலேயே பெரிய ஹீரோக்களின் படங்களில் கமிட்டானார். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருந்த நடிகை சம்பள விஷயத்தில் கூட ரொம்ப கெடுபிடி காட்டாமல் இருந்தார்.

ஆனால் இதெல்லாம் ஆரம்ப காலத்தில் தான். அதன் பிறகு கை நிறைய படங்களை அள்ளிய அம்மணி சம்பளத்திலும் கரார் காட்ட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களைத் தவிர மற்றவை எல்லாம் தோல்வியை தான் தழுவியது.

அதனாலேயே நடிகை சினிமாவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என சொந்த தொழிலையும் தொடங்கி நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றிலும் நடிகை கலந்துகொண்டு கல்லாகட்டி வருகிறார்.

ஓவர் பந்தா காட்டும் நடிகை

சமீபத்தில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியில் இவரை கலந்து கொள்ள அணுகி இருக்கின்றனர். ஆனால் நடிகை ரொம்ப பந்தா காட்டினாராம். எனக்கு பிசினஸ் கிளாஸில் தான் டிக்கெட் போட வேண்டும்.

ரொம்ப நேரம் இருக்க மாட்டேன். நான் என்ன பேசணும்னு நீங்க சொல்ல வேண்டாம். நானே பேசிக் கொள்வேன் என ரொம்பவும் கெடுபிடியாக பேசினாராம் அவரை புக் செய்ய வந்தவர்களும் வேறு வழியில்லாமல் அனைத்திற்கும் தலையாட்டி இருக்கின்றனர்.

சொன்னது போல் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சிறிது நேரம் கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டாராம். இதுதான் இப்போது திரையுலகில் ஒரே பேச்சாக இருக்கிறது.

சமீபத்தில் கூட ஒரு விழாவில் கலந்து கொண்ட போது காரில் இருந்து இறங்கிய நடிகை ரொம்பவும் சீன் போட்டபடி சென்றது விமர்சனமானது. அந்த கார் கதவை கூட உதவியாளர் தான் ஓடி வந்து மூடினார். இப்படி எல்லாம் அட்ராசிட்டி செய்யும் நடிகைக்கு இதெல்லாம் நல்லதல்ல என போகப் போக தெரியும்.

பிரபலங்களின் சமீபத்திய கிசுகிசு செய்திகள்

Next Story

- Advertisement -