இப்ப மட்டும் அந்த நடிகை கோமாவுல இருக்காங்களா.. சான்ஸ் கிடைத்ததும் கொந்தளித்த நடிகர்

Gossip: இப்போது அந்த எவர்கிரீன் நடிகையை பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர் சர்ச்சைகளின் ராணியாக வலம் வருபவர் தான். ஒன்றா இரண்டா இவரை பற்றி சொல்வதற்கு.

இவர் நடிக்க வந்த புதிதிலேயே ஏகப்பட்ட கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதை அடுத்து டாப் ஹீரோக்கள் பல பேருடன் இவரை சேர்த்து வைத்து செய்திகள் பரவி இருக்கிறது.

ஆனாலும் அம்மணி அதையெல்லாம் தூசி தட்டுவது போல் தட்டி அடுத்தடுத்த படங்களை தன் வசப்படுத்தினார். இத்தனை வருடங்கள் ஆகியும் அதே ஜொலிஜொலிப்புடன் நடித்து வரும் இவர் இப்போது மாஸ் ஹீரோவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார்.

ஆனால் நடிகையோ அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. இதுதான் அந்த வில்லன் நடிகருக்கு கடுப்பை கிளப்பி இருக்கிறது. நான் ஏதோ விளையாட்டாக பேசியதை அந்த அம்மா எப்படி ஒரு பிரச்சனையாக மாத்துச்சு.

நடிகை மீது கடுப்பில் இருக்கும் வில்லன் நடிகர்

இப்ப இவ்வளவு பெரிய பிரச்சனை போகுது. அதைப்பற்றி வாயே திறக்கல. இப்ப மட்டும் என்ன அவங்க கோமாவுல இருக்காங்களா என சக நட்பு வட்டாரத்தில் கோபமாக அவர் பேசி வருகிறாராம்.

ஆம் அந்த நடிகர் எதார்த்தமாக ஏதோ சொல்ல போக ஒட்டுமொத்த திரையுலகமே நடிகைக்கு வக்காலத்து வாங்கி அவருக்கு எதிராக நின்றது. ஆனால் இப்போது சோசியல் மீடியாவில் பலபேர் நடிகையைப் பற்றி தப்பும் தவறுமாக பேசி வருகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட நடிகை அசைக்கவில்லை. எல்லாம் அரசியல் சமாச்சாரம் தான் என்கின்றனர். எது எப்படியோ நடிகையால் இன்னும் என்னென்ன சர்ச்சை கிளம்ப போகுதோ தெரியவில்லை.

எவர்கிரீன் நடிகையின் சர்ச்சை சமாச்சாரம்

Next Story

- Advertisement -