குடும்ப குத்து விளக்கு நடிகையின் புது அவதாரம்.. வாய்ப்புக்காக எல்லை மீறும் அம்மணி

Gossip: ஹோமிலியாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் நடிகைகளுக்கு வெகுவிரைவில் மார்க்கெட் குறைந்து விடுகிறது. அதனாலயே புத்திசாலியான நடிகைகள் பட வாய்ப்புக்காக எல்லை மீறிய கவர்ச்சியில் இறங்கி விடுகின்றனர்.

அப்படித்தான் பிரபல சீரியல் நடிகையும் இப்போது சோசியல் மீடியாவே கதி என இருக்கிறார். சின்ன திரையில் ட்ரெண்டிங்கில் இருந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் அந்த நடிகை.

கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் இவருக்கென தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் சீரியலிலேயே அப்படி இப்படி என நடித்து தன் பெயரை இவர் டேமேஜ் செய்து கொண்டார். அதை அடுத்து நடிகையை பற்றி வெளிவந்த சர்ச்சைகளும் அவர் மார்க்கெட்டை குறைத்தது.

இருந்தாலும் தீவிரமாக பட வேட்டையில் இறங்கியவருக்கு இப்போது கை நிறைய படங்கள் இருக்கிறது. அதில் எல்லாம் இவர் ஹீரோயின் கிடையாது. குறிப்பிட்ட கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிளாமருக்கு மாறிய நடிகை

அதில் சில படங்களில் கொஞ்சம் கிளுகிளுப்பான கேரக்டர்களாம். நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இப்போது சகட்டுமேனிக்கு படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அது மட்டுமா சோசியல் மீடியாவில் அரைகுறை உடையில் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

இதைத்தான் இப்போது சின்னத்திரை வட்டாரம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் ரசிகர்களும் இந்த நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஹோம்லியாக இருக்கும் இவருக்கு கிளாமர் சுத்தமாக செட்டாகவில்லை.

இப்படியே போனால் அந்த மூன்றெழுத்து நடிகையின் கதி தான் இவருக்கும். சின்னத்திரையில் நல்ல கேரக்டர்களில் நடித்து வந்த அவர் இப்படித்தான் சினிமாவில் ஐட்டம் நடிகையாக நடிக்க தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வந்த கேரக்டர்களும் கில்மாவாகவே இருந்தது. அப்படி ஒரு நிலைமை வருவதற்குள் இந்த நடிகை சுதாரித்துக் கொண்டால் பரவாயில்லை. இல்லை என்றால் இருக்கிற பெயரும் கெட்டு தான் போகும்.

நடிகைகள் பற்றிய கிசுகிசு செய்திகள்

Next Story

- Advertisement -