ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பவாவின் இன்னொரு முகத்தை கிழித்தெறிந்த பத்தினி நடிகை.. ஆண்டவர் தாங்கி பிடித்ததெல்லாம் வேஸ்ட்டா போச்சு

Bava Chelladurai: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் ஒரு வாரம் தாக்கப்படுத்த எழுத்தாளர் பவா செல்லத்துரை நேற்று அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை ஒருபுறம் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது கமல் இவரை ஆகா ஓகோன்னு புகழ்ந்து தள்ளினார். பவாவும் கமல் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை போட்டியாளர்களிடம் ஒவ்வொரு நாளும் கதை சொன்னார். ஆனால் அந்தக் கதை எல்லாம் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை அதை வைத்து நிறைய சர்ச்சைகளை கிளப்பினார்கள்.

Also Read: நாமினேஷனில் இருக்கும் 7 பேரில் வெளியிறப் போகும் அடுத்த நபர்.. முதல் நாளே மொத்த ஓட்டுகளையும் அள்ளிய சைக்கோ

தன்னுடைய டார்க் சைடு என்ன என்பதை தெரிந்து கொள்ளத்தான் பவா செல்லதுரை பிக் பாஸ் வந்தார். ஆனால் அவரால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காமல் ஆள விடுங்கடா சாமி என கிளம்பி விட்டார். இப்போது பவா செல்லத்துரையை பற்றிய சீக்ரெட்டான விஷயங்களை இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார்.

பவா செல்லத்துரை முதலமைச்சருடன் மட்டுமல்ல பல அமைச்சர்களுடனும் உட்கார்ந்து பேசி இருப்பதை நேரிலேயே ரேகா நாயர் பார்த்திருக்கிறாராம். ஆனால் அவர் அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஒரே இடத்தில் உட்காரக் கூடியவர் கிடையாது. ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தம் அடிக்கணும், வெளிய வரணும், கூட அவருடன் வந்திருக்கும் நண்பர்களை தட்டி பேசணும், இந்த நிகழ்ச்சி எப்போது முடியும் என பரபரன்னு இருக்கக்கூடியவர்.

Also Read: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை.. மேலே விழுந்த திருட்டுப் பழி

அது மட்டுமல்ல ஒரு மணி நேரம் கதை சொல்லுங்கள் என்று பல லட்சம் ரூபாய் கொடுத்து அவரை ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றாலும் கூட ஒரு கதைய சொல்வதற்கு உள்ளேயே இந்த இடத்தை விட்டு எப்ப போய் தம் அடிக்கணும் என்ற நினைப்புடன் தான் இருப்பார்.

ஒருவேளை பாரத பிரதமருடன் பவா உட்கார்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவர் உட்கார்ந்து பேச மாட்டார். அவரால் ஒரு இடத்தில் உருப்படியா இருக்கவே முடியாது அப்படிப்பட்டவருக்கு பிக் பாஸ் வீடு சுத்தமாகவே செட்டாகாது.

Also Read: பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

- Advertisement -

Trending News