வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நாமினேஷனில் இருக்கும் 7 பேரில் வெளியேறப் போகும் அடுத்த நபர்.. முதல் நாளே மொத்த ஓட்டுகளையும் அள்ளிய சைக்கோ

BB7: பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்டு இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது. துவக்கத்திலேயே சூடு பிடித்த சீசன் 7ன் முதல் போட்டியாளராக கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா வெளியேறினார். மீதம் இருக்கும் 17 போட்டியாளர்களும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்டை தயார் செய்தனர்.

இதில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போன்ற இரண்டு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தனித்தனியாக நாமினேட் செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, பிரதீப், அக்ஷயா, ஜோவிகா, மாயா, விஷ்ணு, பூர்ணிமா போன்ற ஏழு போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்றிலிருந்து பிக் பாஸ் ரசிகர்கள் இந்த ஏழு பேருக்கும் தங்கள் ஓட்டுக்களை போட துவங்கியிருக்கின்றனர்.

Also Read: கண்ணம்மாவிற்கு செக் வைத்த பிக் பாஸ்.. போரிங் கண்டஸ்டண்ட் என போட்ட அரெஸ்ட் வாரண்ட்

முதல் நாளே ரசிகர்கள் அளித்த ஓட்டுக்களின் அடிப்படையில் பிரதீப் மொத்த ஓட்டுகளையும் அள்ளி முதலிடத்தில் இருக்கிறார். என்னதான் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினாலும் அவர் இந்த வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பியதால் விசித்ராவிற்கு தங்களது ஆதரவை கொடுத்து ஓட்டிங் லிஸ்டில் 2வது இடத்தில் இருக்க வைத்திருக்கின்றனர்.

3-வது இடத்தில் பெரியவர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத ஜோவிகாவிற்கு கிடைத்திருக்கிறது. இதேபோன்று அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசினால் நிச்சயம் அடுத்த கலவரம் வெடிக்கும். தொடர்ச்சியாக 4-வது இடம் கேரளாவை சேர்ந்த அக்ஷயாவிற்கு கிடைத்திருக்கிறது.

Also Read: பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

ஓட்டிங் லிஸ்டில் 5-வது இடத்தில் விஷ்ணு இருக்கிறார். இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சக போட்டியாளர்களிடம் கோபமாக நடந்து கொள்ளும் இவர், தேவையில்லாமல் பிறருடன் சண்டை போடுகிறார். இது பிக் பாஸ் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறது. இது அவருடைய ஸ்டேட்டர்ஜி என்றாலும் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று மற்ற போட்டியாளர்களை சீண்டு விடுவது சரியல்ல.

6-வது இடத்தில் யூடியூப்பர் பூர்ணிமா இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எனத் தெரிந்ததும் நிச்சயம் நன்றாக விளையாடுவார் என நினைத்தோம். ஆனால் ‘சேர்க்க சரியில்ல பிகிலு’ இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு கெட்ட வார்த்தைகள் பேசுவது, தேவையில்லாத விஷயத்தை கிளப்பி விடுவது என மட்டமான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: எதிர்பார்த்து ஏமாந்து வெளியேறிய அனன்யா.. ஒரு வாரத்திற்கு பிக் பாஸில் வாங்கிய சம்பளம்

ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் மாயா இருக்கிறார். இவர் நேற்று கூட பிரதீப்பை ஒரு சைக்கோ என்றும், அவருடன் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஓவராக சீன் போட்டார். இவருடைய நடவடிக்கை பிக் பாஸ் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. மாயா இந்த வீட்டில் இல்லாம இருந்தா நல்லா இருக்கும் என்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் விரும்பி வருவதால் இந்த வாரம் அதிரடியாக வெளியேறுகிறார்.

- Advertisement -

Trending News