ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை.. மேலே விழுந்த திருட்டுப் பழி

Bava Chelladurai: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அனன்யா வெளியேறிய நிலையில் இன்று பவா செல்லத்துரையும் வெளியேறிவிட்டார். அதாவது கடந்த பிக் பாஸ் சீசன்களில் ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். அதேபோல் சிலர் தங்களால் இந்த வீட்டுக்குள் இருக்க முடியவில்லை என தானாகவே முன்வந்தும் வெளியே உள்ளனர்.

அந்த வகையில் ஓவியா, பரணி ஆகியோர் தாமாக வெளியேறிய நிலையில் பவா செல்லதுரையும் இந்த சூழல் தனக்கு பிடிக்கவில்லை என்று வெளியேறிவிட்டார். ஒரு மிகச் சிறந்த கதை ஆசிரியராக பார்க்கப்பட்ட இவர் மிக குறுகிய காலத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

Also Read : பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பாவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பவா செல்லத்துரை மீது திருட்டுப்பழி ஒன்று விழுந்துள்ளது. அதாவது ஜோவிகாவுக்கு ஆரம்பக் கல்வி முக்கியம் என விசித்ரா பேசும் போது படிப்பு அவ்வளவு அவசியம் இல்லை என்று பவா செல்லத்துரை கூறியிருந்தார். இவர் இவ்வாறு சொன்னது தவறு என சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ புகழேந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அதாவது தன்னுடைய கவிதையை பவா திருடி விட்டதாகவும் கூறுகிறார். சிறகிசைத்த காலம் என்ற நூலை பவா செல்லதுரை மற்றும் நெடுஞ்செழியன் இருவரும் தொகுத்திருந்தனர். இதில் தன்னுடைய கரும்பலகையில் எழுதாதவை என்ற நூலில் இருந்து பிள்ளைகளே என்று நான் எழுதிய கவிதையை திருடி இருந்தனர்.

Also Read : இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 3 போட்டியாளர்கள்.. அதிகமா கார்னர் செய்யப்பட்ட அமுல் பேபி

அதுவும் பிள்ளைகளே என்ற வார்த்தைக்கு பதிலாக மாணவர்களே என்று தொடங்கி இருந்தார்கள். தன்னுடைய கவிதையை பயன்படுத்தியதைப் பற்றி தான் எந்த தவறும் சொல்லவில்லை. ஆனால் அதில் என்னுடைய பெயரோ, தொகுப்பின் பெயரோ போடவில்லை என்பதுதான் வருத்தம் என்று புகழேந்தி பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல்வி முக்கியமில்லை என்று சொல்லும் பவா செல்லதுரை சிறகிசைத்த காலம் என்ற நூலை வெளியிட அவசியம் என்ன என்றும் அவர் கேட்டு இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்ததால் இதுவரை பவா செல்லதுரை சேர்த்து வைத்த மொத்த பேரும் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

Also Read : பொறுப்பில்லாமல் திரிஞ்சா கடைக்குட்டியா இது.? பிக் பாஸில் சூதானமாக விளையாடி 2வது வாரமே பிடித்த கேப்டன்ஷிப்

- Advertisement -

Trending News