அந்தப் படமும் காப்பி படம் தான்.. உண்மையை ஒத்துக்கிட்ட உலக நாயகன்

Actot Kamal: நான்கு வயதிலிருந்து சினிமாவை கரைத்துக் குடித்துக் கொண்டிருப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன்.  இவர் நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் திறமை கொண்டவர். அதிலும் இவர் எழுதி நடித்த ஒரு படம் அட்ட காப்பி என்பதை அவரே தன்னுடைய வாயால் ஒத்துக் கொண்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

விக்ரம் படத்திற்கு பிறகு உலக நாயகன் இப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கமலின் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன தேவர் மகன் படத்தின் கதையும் அட்ட காப்பி தான் என்பது தெரிய வந்துள்ளது.

ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் கமலஹாசனிடம் எடக்கு முடக்காக  கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது செய்தியாளர் ஒருவர், ‘உங்களுக்கு உலக நாயகன் என்று கூப்பிடுகிறார்கள், ஆனால் தேவர்மகனை தவிர உங்கள் படம் எல்லாம் காப்பி படமாக இருக்கிறது ஏன்?’ என்று கமலஹாசனிடம் கேட்டுள்ளார்.

Also read: 5 தமிழ் ஹீரோக்களை நேரடியாக ஹிந்தி படங்களில் நடிக்க வைக்கும் அட்லி.. கமலுக்கு போட்ட ஸ்கெட்ச்

மொத்த உண்மையையும் போட்டு உடைத்த கமல்!

அதற்கு கமல் அதுவும் காப்பி படம் தான் என்று உண்மையை சொல்லிவிட்டார். தேவர் மகன் படத்தின் கதை வீரபாண்டியன் என்கின்ற நாவலில் எடுக்கப்பட்ட கதை என்று கமலஹாசன் மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விட்டார். ஏனென்றால் அந்த படத்தின் கதையை எழுதியதே கமல் தான்.

என் மக்களுக்கு நான் தான் சொல்லுவேன் என்று இந்த விஷயத்தை போல்டாக சொல்லி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். அது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தேவர் மகன் படம் எடுக்கப்பட்டது என்று கமல் மேலும் விளக்கம் கொடுத்தார்.

Also read: பிக்பாஸை மிரள விட்ட 8 சர்ச்சை போட்டியாளர்கள்.. ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பிரதீப்