எதிர்பார்ப்பை எகிற விட்ட தங்கலான் பட அப்டேட்.. மதுரையில் நடக்கப் போகும் தரமான சம்பவம்

Thangalaan Movie Update: இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தங்கலான். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைக்கும் சியான் விக்ரமின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் தங்கலான் இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் சியானின் கெட்டப் பார்ப்பதற்கே மிரளும் அளவுக்கு இருக்கிறது.

இதில் இவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். கடந்த ஆண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஒத்திகையின் போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Also Read: ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு

ஏனென்றால் அடுத்ததாக மதுரையில் தங்கலான் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். தங்கலான் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கான ஷெட்யூல் தற்போது நிறைவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல தங்கலான்படத்தை குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சியான் விக்ரம் இரண்டு கெட்டபில் நடிக்கப் போகிறார். அதில் ஒன்று 30 வருட இளமையான தோற்றத்திலும், மற்றொன்றில் மிகவும் வயதான கெட்டப்பிலும் நடிக்கிறார்.

Also Read: இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

சென்னையைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடக்கப்போகிறது. அதற்கான பணிகளில் தற்போது படக்குழு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் தங்கலான் படத்திற்கான ஃப்ரீ இண்டிபெண்டன்ட் போர்ஷன் அனைத்தும் மதுரையில்தான் படமாக்கப்பட போகின்றனர்.

எனவே தங்கலான் மதுரையில் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். அத்துடன் இந்த படத்தை 2024-இன் தொடக்கத்திலேயே ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் புதுப்புது அப்டேட் ரசிகர்களின் மத்தியில் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: அத்தைக்கு லிப் லாக் கொடுத்து வாந்தி வர வைத்த விக்ரம்.. இது என்னடா மோசமான உருட்டா இருக்கே!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்