இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

Thangalaan: பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் விக்ரம், மாளவிகாமோகனன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். சமீப காலமாக விக்ரமுக்கு எந்த படங்களும் கை கொடுக்காத நிலையில் தங்கலான் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இதில் அவருடைய கெட்டப் வித்யாசமாக இருக்கிறது.

பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்படும் இப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகிறது. மேலும் தங்கலான் படம் வருகின்ற டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த வருடம் முதலில் வெளியாகும் என பா ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் கூறுகினார்.

Also Read : விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

மேலும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கும் விக்ரமுக்கு இதுவும் சகஜம் தான். ஆனாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதால் தன்னால் முடிந்த கடின உழைப்பை இதில் போட்டு வருகிறார். சமீபத்தில் தங்கலான் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த காலத்தில் நிஜ தங்கலானாக வாழ்ந்தவர்களின் புகைப்படம் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு புகைப்படத்தையும் சேர்த்து ரசிகர்கள் ரீல் மற்றும் ரியல் தங்கலான் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு புகைப்படங்களுமே பெரும்பாலானவற்றில் ஒத்துப் போகிறது.

Also Read : ரஜினியுடன் 32 வருடங்களுக்குப் பின் இணையும் கூட்டணி.. சூர்யா, விக்ரம் இடத்திற்கு வரும் பாலிவுட் ஸ்டார்

மேலும் பா ரஞ்சித் ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் தோராயமாக எடுக்கக் கூடியவர் அல்ல. பல ஆராய்ச்சிக்கு பின்பு தான் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி வருகிறார். ஆகையால் நிச்சயமாக பழங்குடியினர் வாழ்ந்த வாழ்க்கையை நூல் இழை மாறாமல் நாம் முன் காட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் இப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் பழங்குடியினராக நடிப்பதற்காக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4 மணி முதல் 5 மணி வரை மேக்கப் போடுவதாக கூறியிருந்தார். இவ்வாறு படத்தில் உள்ள ஒவ்வொருவரும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறார்கள்.

reel-real-thangalaan
reel-real-thangalaan

Also Read : துருவ நட்சத்திரம் பார்க்க கௌதம் மேனன் கூறும் 3 முக்கிய விஷயங்கள்.. பல வருட எதிர்பார்ப்பு புது ஸ்டைலில் வரும் விக்ரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்