Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அத்தைக்கு லிப் லாக் கொடுத்து வாந்தி வர வைத்த விக்ரம்.. இது என்னடா மோசமான உருட்டா இருக்கே!

விக்ரம் லிப்லாக் கொடுக்கும் போது நடிகை வாந்தி எடுத்துள்ளார்.

vikram-cinemapettai

விக்ரம் திறமையான நடிகராக இருந்தும் சில சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அப்போதிலிருந்தே இவரைப் பற்றி சில கிசுகிசுக்கள் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாத விக்ரம் எப்படியும் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வரவேண்டும் என்று தற்போது வரை உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரின் திரை வாழ்க்கையை திருப்பி போடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த ஒரு நடிகை சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

Also Read : கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

இதைக் கேட்டு விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். அதாவது விக்ரமின் ஆரம்ப காலகட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் மீரா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஆவார்.

ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவ்வாறு சூர்யாவின் ஆறு படத்தில் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு பல வருடம் கழித்து மீண்டும் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

Also Read : வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதா?. முடியவே முடியாது என ஒத்த காலில் நிற்கும் விக்ரம்

அதாவது சாமி 2 படத்தில் விக்ரமின் அத்தையாக, அதாவது கீர்த்தி சுரேஷின் அம்மாவாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா மீரா படத்தில் தனக்கும் விக்ரமுக்கும் லிப்லாக் காட்சி எடுக்கப்பட்டது என கூறியிருந்தார். தண்ணீரில் அந்த காட்சி எடுக்கப்படும் போது கால் வைக்கும் இடம் ரொம்ப அழுக்காக இருந்ததாக ஐஸ்வர்யா கூறினார்.

அங்கு நிற்கவே ரொம்ப நிரடலாக இருந்ததாகவும், விக்ரமுடன் லிப் லாக் கிஸ் அடிக்கும் போது வாந்தி வந்து விட்டதாக ஐஸ்வர்யா கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அத்தைக்கு லிப் கிஸ் கொடுத்து வாந்தி வர செய்துள்ளார் விக்ரம் என கேலியாக கமெண்ட் செய்துள்ளனர். இதற்கு விக்ரம் ரசிகர்கள் உருட்டறதுக்கும் ஒரு அளவில்லையா என்று கொந்தளித்துள்ளனர்.

Also Read : இளவட்ட வயசில் துருவ் செய்யும் மட்டமான வேலை.. உச்சகட்ட கவலையில் இருக்கும் விக்ரம்

Continue Reading
To Top