Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிப்ரவரி மாதத்தில் தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்

விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்திற்கான அப்டேட் பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து விருந்தாக வர இருக்கிறது.

vijay-cinemapettai

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக்க இருக்கும் படம் தளபதி 67. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான ரசிகர்களையும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் படம் அமைந்து வருகிறது. இந்த உற்சாகத்தின் வெளிப்பாடாகத்தான் லோகேஷ் இந்த படத்திற்கான அப்டேடுகள் பிப்ரவரில் 1,2,3 இல் வெளிவரும் என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதியில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், 2 ஆம் தேதியில் பூஜை போட்டோஸ் மற்றும் 3 ஆம் தேதியில் ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்படும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தை ஒரு பான் இந்தியா படமாக உருவாக்கப்படுவதாக லோகேஷ் முடிவு செய்திருக்கிறார்.

Also read: தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் காம்போ பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்பொழுது உலகநாயகன் கமலஹாசனும் இணைகிறார். இதை கேள்விப்பட்டதும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் வேற லெவல்ல மாறிக் கொண்டிருக்கிறது.

இதுவரை எந்த படத்திலும் பிரமோஷனுக்காக சென்னையை தவிர்த்து போகாத விஜய், இப்பொழுது தளபதி 67 படத்தின் பிரமோஷனுக்கு இந்தியாவை சுற்றும் வாலிபராக களத்தில் இறங்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளார். இது முழுக்க முழுக்க இந்த படத்தில் இருந்த ஆர்வமும் மற்றும் லோகேஷ் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம்.

Also read: ரோலக்ஸ் சூர்யாவைப் போல் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. தளபதி 67-ல் முரட்டு மீசையுடன் வைரல் புகைப்படம்

மேலும் பொங்கல் அன்று வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதில் வரும் பாட்டு ரஞ்சிதமே பெரியளவில் ஹிட்டானது. இப்பொழுது இந்தப் பாட்டுக்கான முழு வீடியோ வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

மேலும் வாரிசு படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சிக்கான வீடியோக்களும் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி வாரிசு படம் அமேசான் ப்ரைம் சேனலில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இப்படி தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையப்போகுது என்பது எந்த சந்தேகமும் இல்லை. இதை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Also read: தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?

Continue Reading
To Top