தளபதி 69 தயாரிப்பாளரை தூக்கி எறிந்த விஜய்.. பெரிய மனுஷன் போர்வையில் செய்த அற்ப விஷயம்

Vijay In Thalapathy 69: விஜய் இப்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த படத்திற்கான இயக்குனரை லாக் செய்துவிட்டார். ஆரம்பத்தில் தளபதி 69 படத்தை இயக்கப் போகும் இயக்குனர்களின் லிஸ்டில் அட்லி, ஏஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எச் வினோத் போன்ற முன்னணி இயக்குனர்களின் பெயர் அடிபட்டது.

ஆனால் விஜய் யாரிடமும் எந்த பதிலும் சொல்லாததால் ஒவ்வொரு இயக்குனர்களும் மற்ற நடிகர்களை வைத்து கமிட் ஆகி விட்டார்கள். அந்த வகையில் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தை எச் வினோத்துடன் கமிட் ஆகிவிட்டார்.

மேலும் இது சம்பந்தமான ஒவ்வொரு வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தை ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கப் போவதாக இருந்தது. ஆனால் இவர்களுக்குள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. பேச்சுவார்த்தை மட்டும் போய்க் கொண்டிருந்தது.

விஜய் எடுத்த அதிரடி முடிவு

ஆனால் அதற்குள் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் தளபதி 69 படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஹிந்தி மொழி மாற்றம் உரிமை அனைத்திற்கும் சேர்த்து வியாபாரம் பண்ண ஆரம்பித்து விட்டார். இது என்னடா படமே இன்னும் உறுதியாகவில்லை. தயாரிப்பாளரிடம் எந்தவித அக்ரீமெண்டுமே போடவில்லை. அதற்குள் இப்படியெல்லாம் வேலையே ஆரம்பித்து விட்டாரே என்று விஜய் காதுக்கு போய்விட்டது.

உடனே விஜய் இதெல்லாம் பார்த்து சும்மாவா இருப்பார். இப்பவே இப்படி எல்லாம் அக்கப்போர் பண்ணுகிறாரே, படம் ஆரம்பித்துவிட்டால் இன்னும் என்னெல்லாம் செய்வாரோ என்பதால் இப்படத்தில் இருந்து தயாரிப்பாளர் தனய்யாவை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார். பெரிய தயாரிப்பாளர் நாம் எது பண்ணாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க என்று அற்ப ஆசையில் செய்த விஷயம் தற்போது விபரீதமாக அவருக்கு திரும்பி விட்டது.

இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர் யார் இருக்க வேண்டும் என்ற முடிவு விஜய் கையில் தான் இருக்கிறது. மேலும் விஜய் அரசியலுக்குள் நுழைவதால் அது சம்பந்தமான கதைகளும் வசனங்களும் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

இதற்கு எந்த தயாரிப்பாளர் சம்மதம் கொடுப்பாரோ அவரே கூடிய விரைவில் தளபதி 69 படத்தை தயாரிப்பார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்