24 மணி நேரமும் விஜய் புராணம் தான்.. சல்லி சல்லியாக உடைந்த சைக்கோ இயக்குனரின் மனக்கோட்டை

Top Director: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யை வைத்து படம் எடுத்து விட வேண்டும் என டாப் இயக்குனர்கள் கதையும் கையும்மாய் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அதிலும் சைக்கோ இயக்குனர் விஜய்யுடன் சேர்ந்து நடித்தால் அவரை பார்த்து கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என நடிகராகவே மாறினார். அப்படி விஜய் உடன் சேர்ந்து நடித்தும் சைக்கோ இயக்குனரால் தளபதியிடம் கதை சொல்ல முடியாமல் போனது மட்டுமில்லாமல் அவர் மனதில் கட்டி இருந்த கோட்டையும் சல்லி சல்லியாக உடைந்தது.

பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின் சமீப காலமாகவே 24 மணி நேரமும் விஜய்யை பற்றியே பேசி வந்தார். விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர் என்று கூறி வந்தார். இதனால் மிஸ்கினுக்கு லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதெல்லாம் எதற்கு என்றால், விஜய்க்கு ஒரு ஆக்ஷன் ஸ்டோரியை மிஸ்கின் ரெடி பண்ணி வைத்திருக்கிறார்.

அதை விஜய் கிட்ட சொல்லி எப்படியாவது கால் சீட் வாங்கி விட வேண்டும் என்பதற்காகவே லியோ படப்பிடிப்பு சமயத்தில் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கடைசிவரை விஜய் கிட்ட அந்த படத்தின் கதையை சொல்ல முடியவில்லை. லோகேஷ் லியோ படத்தின் படப்பிடிப்பை வேறு வேறு இடத்தில் நடத்தினார். விஜய்- மிஸ்கின் இருவரும் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.

Also Read: பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விஜய்யின் கடைசி 5 படங்கள்.. தடுமாறினாலும் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ

இதனால் கடுப்பாகி போன மிஸ்கின் எவ்வளவு நாள் தான் இந்த கதையை வைத்துக் கொண்டு காத்திருப்பது. இந்தப் படத்திற்கு விஜய்யே வேண்டாம் என்று அதிரடியான முடிவை எடுத்தார். அந்த கதையில் இப்போது விஜய் சேதுபதியை வைத்து எடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேல் விஜய்யை பார்க்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம் மிஸ்கின்.

அந்த அளவிற்கு தளபதி சைக்கோ இயக்குனரின் பொறுமையை சோதித்து விட்டார். இப்போது மிஸ்கின் ஹாலிவுட் ரேஞ்சுக்கு விஜய் சேதுபதியை வைத்து ஒரு ஆக்சன் படத்தை எடுக்க போகிறார். இந்த படம் ட்ரெயினில் நடக்கும் குண்டு வெடிப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. குண்டு வைக்கப்பட்ட அதே ட்ரெயினில் விஜய் சேதுபதி பயணிக்கிறார். அவர் எப்படி வெடிகுண்டை செயலிழக்க வைத்து மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெறுகிறது. படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். விஜய்யை மனதில் வைத்து இந்த படத்தின் கதையை மிஸ்கின் எழுதி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அதுமட்டுமல்ல மிஸ்கினுக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய் பட ரேஞ்சுக்கு வியாபாரத்தை நம்பிய சிவகார்த்திகேயன்.. தவிடு பொடியாகி போன கனவு கோட்டை