பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விஜய்யின் கடைசி 5 படங்கள்.. தடுமாறினாலும் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ

Box Office Collection Of Vijay’s Last 5 Movies: முன்பெல்லாம் நூறு கோடி வசூலை தொடுவது பெரும் சாதனையாக இருந்த நிலையில் இப்போது டாப் ஹீரோக்களுக்கு அதெல்லாம் ஜூஜூபியாக மாறி இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் அவர்கள் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கடவுளாகவே மாறி இருக்கின்றனர். அதில் விஜய்யின் கடைசி ஐந்து படங்கள் செய்த வசூல் சாதனையை பற்றி இங்கு காண்போம்.

பிகில்: அட்லி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, கதிர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு 300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். வேற லெவல் காம்போவாக இருந்த இவர்களின் பெர்ஃபார்மென்ஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 135 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் 285 கோடி வரை வசூலித்து விஜய்க்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.

Also read: இது எல்லாத்தையும் சரிகட்ட தான் இந்த லியோ சக்சஸ் மீட்.. லலித் தாஸ் உருட்டுக்கு நாளையோட ஒரு முடிவு!

பீஸ்ட்: மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பீஸ்ட். விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை 150 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இப்படி பிரம்மாண்டமாக உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் இதன் வசூல் 320 கோடியாக அமைந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்தது.

வாரிசு: இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் காவியமாக இருந்தது. ஆனாலும் இதற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அந்த வகையில் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் 300 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லியோ: இந்த வருடம் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு சர்ப்ரைஸ் ஆக வெளிவந்துள்ள இப்படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. லோகேஷ் உடன் மீண்டும் இணைந்துள்ள விஜய் இதன் மூலம் எல்சியு கான்செப்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார். இப்படி படத்தில் இருக்கும் பல விஷயங்கள் கொண்டாடப்பட்டாலும் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதுவே படத்திற்கான ஒரு பின்னடைவாகவும் அமைந்தது. இதில் தயாரிப்பாளர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முறைகேடு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படி லியோ பல விஷயங்களில் தடுமாறினாலும் பாக்ஸ் ஆபிஸை பொருத்தவரையில் ரெக்கார்ட் பிரேக் செய்து இருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் விஜய் நடித்த படங்களிலேயே இதுதான் தற்போதைய நிலவரப்படி அதிகபட்ச வசூலாக 540 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

இப்படியாக விஜய்யின் கடைசி ஐந்து படங்கள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டி மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

Also read: அப்படி இப்படின்னு தியேட்டர்ல ஓட்டியாச்சு.. ஓடிடி-யில் ஓட்டுவதற்கு லோகேஷ் வைத்து காய் நகர்த்தும் லலித்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்