conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

rajini-sivakarthikeyan

பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

பொங்கல் தினத்தன்று வசூலை வாரி குவிக்க வெளிவரும் 9 படங்கள்.

kiran

வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

கிரண் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

sundar-c-lawrance

சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

சுந்தர் சி மற்றும் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்த பிறகு அந்த நடிகைகளுடைய கேரியரே பரிதாபமாக போய்விட்டது.

simran-laila

சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

சிம்ரன் வில்லியாக மிரட்டிய படங்களை பற்றி பார்க்கலாம்.

sundar c- kushbhoo

அப்பாவை மிஞ்சிய உயரம், அமுல் பேபி போல் இருக்கும் அவந்திகா புகைப்படம்.. குஷ்பூவை ஓவர் டேக் செய்யும் அழகு

லேட்டஸ்டாக அவந்திகா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

rajini-old

200 நாட்களுக்கு மேல் தியேட்டரில் கொடி கட்டி பறந்த ரஜினியின் 8 படங்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டி இவரே தான்

ரஜினி நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய எட்டு படங்களை பற்றி பார்க்கலாம்.

rajini-dhanush

சூப்பர் ஸ்டார் டைட்டிலை களவாடிய 10 படங்கள்.. மாமா தானே என உரிமையோடு 4 முறை சுட்ட தனுஷ்

ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 10 படங்களின் டைட்டில்களை மீண்டும் தங்களுடைய படங்களுக்கு வைத்திருக்கிறார்கள் இந்த நடிகர்கள்.

aswins

அஸ்வின்ஸ் ஆரம்பித்து வைத்த பேய் சீசன்.. வரிசையாக ரிலீசாக போகும் தரமான 2 படங்கள்

அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கும் இரண்டு தரமான தமிழ் ஹாரர் படங்கள்.

sundar-c

அஞ்சே மாசத்துல அறுவடை முடிச்ச சுந்தர் சி.. நமக்கு நம்ம ரூட் தான் சரி என உடைச்ச பூசணிக்கா

தலைநகரம் 2 தோல்வி இயக்குனர் சுந்தர் சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துவிட்டது.

Mahanadhi

போதிதர்மனுக்கு முந்தியே அசம்பாவிதங்களை கணித்த கமலின் 5 படங்கள்.. ஊழலில் கலங்க வைத்த மகாநதி

உலகநாயகன் கமலஹாசனின் படங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே உண்மையாக நடந்து இருக்கிறது.

maadhavan

மாதவன் சினிமாவை வெறுக்க காரணமாய் அமைந்த 5 படங்கள்.. நடிப்பே வேண்டாம் என துபாய் பறந்த மேடி

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் திடீரென கதை தேர்வில் பயங்கரமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்தார்.

apoorva-sagodharargal

முடிஞ்சா கண்டுபிடி என ட்விஸ்ட் வைத்த கமலின் 5 படங்கள்.. 34 வருடத்திற்கு முன்பே வேடிக்கை காட்டிய அப்பு

எல்லோருக்குமே எப்படி கமல் குள்ளமாக நடித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

vijay-sad

தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் 3 படங்கள்.. தளபதி இயக்குனருக்கு வந்த சோதனை

ரிலீசுக்கு தயாராகி கிடப்பில் போடப்பட்ட 3 படங்களை பற்றி பார்ப்போம்.