சுதா கொங்கரா, சூர்யா புது பட அப்டேட்.. சூரரை போற்றை விட 2 மடங்கு சம்பவம் செய்ய ரெடி

Surya 43 Update: நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என்று ஐந்து கேட்டகிரிகளில் இந்த படம் தேசிய விருது பெற்றது. தற்போது சூர்யா தன்னுடைய 43 வது படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணியுடன் இணைந்து இருக்கிறார்.

சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரம்மாண்ட அளவில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இது வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம். இந்த படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா அடுத்து தன்னுடைய வெற்றி இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணைவது உறுதியானது. சமீபத்தில் படத்தின் டைட்டில் புறநானூறு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Also Read:போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகிய ஹிட்டான 5 படங்கள்.. சிம்பு, தனுஷ் யுத்தத்திற்கு நடுவே வந்த வாரணம் ஆயிரம்

வரலாற்று படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. 1950 முதல் 1965 வரை வரை இருந்த காலகட்டத்தை மீண்டும் பட குழு கண் முன் கொண்டு வருகிறது. அந்த சமயத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டம் தான் இந்த படத்தில் கதை. சூர்யா இதில் கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார்.

புறநானூறு படத்தின் புதிய அப்டேட்

புறநானூறு படத்தில் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறுகிறது. அமெரிக்கன் கல்லூரி இன்று வரை பழமை மாறாமல் இருப்பதால் பீரியாடிக் கதைகளத்திற்கு சரியாக இருக்கும். சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட கதை ஆரம்பம் ஆகிறது.

அந்த காலகட்டத்தில் இருந்த சென்னையை மீண்டும் செட் போட்டு உருவாக்கி இந்த படத்திற்காக பயன்படுத்த இருக்கிறார்களாம். இதற்காக சில புகைப்படங்கள், டாக்குமென்டரி வீடியோக்களை பார்த்து பழைய அண்ணா சாலை மற்றும் பழைய தலைமைச் செயலகத்தை செட் போட இருக்கிறார்கள். இப்போது இருக்கும் தலைமை செயலகத்திலும் படபிடிப்பிற்காக அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதை மீண்டும் படத்தின் மூலம் இப்போது இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு கண் முன் காட்ட இருக்கிறார்கள் சூர்யா மற்றும் சுதா கொங்கரா. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு படபிடிப்பிற்கு முன்பே அதிகமாகிவிட்டது.

Also Read:கங்குவாவை அடுத்து கேங்ஸ்டர் ஆக களம் காண உள்ள சூர்யா. பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்