சூர்யாவிற்கு வந்த பெரிய ஆபத்து.. பேராபத்தில் சிக்க வைத்த சிறுத்தை சிவா

‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு சூர்யா இப்போது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறார். இன்னும் பெயரிடப்படாத நிலையில் இந்த படம் தற்போது சூர்யா 42 என்று சொல்லப்படுகிறது.

சூர்யா 42 படத்திற்கான ப்ரொடக்சன் வேலைகள் கடந்த மாதம் தொடங்கி விட்டது. இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரை பார்க்கும் போது இந்த படம் வரலாற்று கதை சம்மந்தப்பட்ட படம் என்பது போல் தெரிகிறது.

Also Read: படப்பிடிப்பிற்கு முன்னரே பல கண்டிஷன் போட்ட சூர்யா.. விழி பிதுங்கி நிற்கும் சிறுத்தை சிவா

சிலர் இந்த படம் வேள்பாரி நாவலை மையமாக கொண்டது என்கிறார்கள். சிறுத்தை சிவா இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் எடுக்க இருக்கிறார். இதில் தான் இந்த படத்திற்கான சிக்கலே இருக்கிறது. பொதுவாக கோலிவுட்டில் 3டி தொழில்நுட்பத்தில் வந்த படங்கள் எதுமே அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் KS ரவிக்குமார் தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இதேபோன்று 3டி தொழில்நுட்பத்தில் கோச்சடையான் படத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு எடுத்தார். இதில் ரஜினிகாந்த் நடித்தார். உண்மையை சொல்ல போனால் பாகுபலிக்கு சமமான கதையை கொண்ட படம் இது. ஆனால் 3டி படம் என்பதால் வெற்றி பெறவில்லை.

Also Read: கல்லா கட்ட வித்தியாசமாக ரிஸ்க் எடுக்கும் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய சிறுத்தை சிவா கூட்டணி

இப்போது சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பது, சூர்யாவின் ரசிகர்களுக்கும் , கோலிவுட் சினிமாவுக்கும் சற்று பதட்டமாகவே உள்ளது. மற்ற 3டி படங்கள் போன்று சூர்யாவின் இந்த படம் பிளாப் ஆகி விடுமோ என்ற பயம் தான் இந்த பதட்டத்திற்கு காரணம்.

சூர்யா 42ல் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். சூர்யா 42 மொத்தம் 10 மொழிகளில் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read: சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

Next Story

- Advertisement -