புது குணசேகரனால் தடுமாறும் சன் டிவியின் டிஆர்பி.. எதிர்நீச்சல் கிடாரியை பலி கொடுக்க நேரம் வந்தாச்சு

Ethirneechal Trp: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலிலே எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் தான் ரசிகர்களிடமிருந்து ஏகபோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்த நாடகத்தின் கதையும், ஒவ்வொரு ஆர்டிஸ்ட்களின் எதார்த்தமான நடிப்பும் தான் மக்களை ரொம்பவே கவர்ந்தது. அதிலும் குணசேகரன் கேரக்டர் வில்லனாக இருந்தாலும் அனைவரும் விரும்பி பார்க்க வைத்தது இவருடைய நக்கல் நையாண்டி ஆன பேச்சு.

அதனாலையே இந்த நாடகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து சிம்ம சொப்பனமாக அனைவருடைய மனதிலும் ஒய்யாரத்தில் குடி புகுந்தது. இப்படி தொடர்ந்து ரெண்டு வருஷமாக மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த நாடகம் தற்போது தட்டு தடுமாறி பார்ப்பவர்களை வெறுக்க வைத்து வருகிறது. அதற்கு காரணம் புதுசாக வந்த குணசேகரின் நடிப்புதான்.

Also read: பேசியே கொள்வான், இந்த குணசேகரன் கொன்னுட்டு தான் பேசுவான்.. அப்பத்தாவுடன் தோற்றுப் போகும் மருமகள்கள்

அதாவது புதுசாக வந்த குணசேகரன் ரொம்பவே வில்லத்தனமாக வார்த்தையிலும் நடிப்பிலும் எரிச்சல் அடைய வைக்கிறார். இதற்கு முன்னதாக நடித்த நடிகர் மாரிமுத்துவிடம் இருந்த காமெடி கலந்த நக்கல், பேச்சிலேயே ஒரு டெரரான லுக் இது எதுவுமே புதுசாக வந்த குணசேகரனிடம் இல்லை. இவர் எப்போதும் வேட்டிய மடிச்சு கட்டிட்டு போலீசையை மிதித்து தொம்சம் பண்ற அளவிற்கு ரவுடிசம் பண்ணி வருகிறார்.

அத்துடன் தம்பி மேல ஓவரா பாசம் இருப்பது போல் அக்கறையுடன் பேசுகிறார். ஆனால் பழைய குணசேகரன் கேரக்டர் என்னதான் தம்பி என்று பேசினாலும் வெறும் வாயளவில் தான். மனதார சுயநலம் பிடித்த ஒரு கேரக்டராக தான் இருப்பார். அத்துடன் யாராவது எதிர்த்து பேசினாலும் அவர்களுக்கு சரியான நேரத்தில் கவுண்டர் கொடுத்து அவர்களை கலாய்த்து விட்டு பேசிடுவார்.

Also read: ஈஸ்வரியை பழிக்கு பழி வாங்க கதிர் பற்ற வைத்த நெருப்பு.. உனக்குப் பிறந்தவளா? வெளுத்து வாங்கும் ஆதி குணசேகரன்

இப்படி இவர் கேரக்டரை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இந்த குணசேகரின் நடவடிக்கைகள் இருக்கிறது. முக்கியமாக அந்த குணசேகரன் எதற்கெடுத்தாலும் யாரையும் அடிக்கிறதுக்கு கை நீட்ட மாட்டார். ஆனால் இவரை பொறுத்தவரை முதலில் கை தான் பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை மட்டம் தட்டி பேசினால் கூட அவர்கள் முகம் சுளிக்காத அளவிற்கு அது காமெடியாக போய்விடும்.

ஆனால் இவர் தற்போது வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை ரொம்பவே கேவலமாக பேசி தரக்குறைவாக நடத்தி அனுப்பி வைத்திருக்கிறார். இதெல்லாம் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தை பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது. எங்களுக்கு பிடிக்கவில்லை தயவு செய்து இந்த குணசேகரன் கேரக்டரை மாற்றுங்கள் என்று பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இப்படியே போனால் சன் டிவி டிஆர்பி ரொம்பவே அடிபட்டு விடும். அதனால் கூடிய விரைவில் குணசேகரன் கேரக்டரில் நடித்துவரும் வேல ராமமூர்த்தியை மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: மரண மாஸ் என்ட்ரி கொடுத்த ஆதி குணசேகரன்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான எதிர்நீச்சல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்