புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மரண மாஸ் என்ட்ரி கொடுத்த ஆதி குணசேகரன்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டருக்கு புதிதாக யார் வரப் போகிறார் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாஸ் என்டரி கொடுத்து வேல ராமமூர்த்தி வந்திருக்கிறார். அதாவது சின்னத்திரை வரலாற்றிலேயே ஒரு கேரக்டர் இந்த அளவுக்கு ஹைப்பை ஏற்படுத்தியது என்றால் அது குணசேகரன் கதாபாத்திரத்துக்கு மட்டுமே.

ஆனாலும் இவரை மாசாக காட்டுவதற்காக போலீசை அடித்ததெல்லாம் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. முக்கியமாக இதற்கு முன்னதாக நடித்த மாரிமுத்து என்னதான் வில்லனாக இருந்தாலும் அவருடைய பேச்சிலும், பார்வையிலும் தான் டெரராக இருக்கும். ஆனால் இவர் பேச்சுக்கே இடமில்லை என்று நேரடியாக காரியத்திலேயே இறங்கி ஆக்ரோஷமான நடிப்பை காட்டி வருகிறார்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

இதை பார்த்த ஒரு சில பேர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் இவரை தவிர வேறு யாரு வந்தாலும் பொருத்தமாக இருக்காது என்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். மேலும் போலீசிடம் கதிர் மற்றும் ஞானம் தேவை இல்லாமல் வாயை கொடுத்ததால் அடியும் உதையும் நல்லாவே அவர்களுக்கு கிடைத்தது.

பார்க்க பாவமாக இருந்தாலும் இவர்கள் செய்த அக்கிரமத்திற்கு இப்பவாவது தண்டனை கிடைக்குது என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதற்குள் குணசேகரன் எண்டரி கொடுத்து போலீசாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி தம்பிகளிடம் பாசத்தை கொட்டி விட்டார். இதற்கு இடையில் வீட்டில் மாமியார் பேசிய பேச்சுக்கு நந்தினி எந்த அளவுக்கு பதிலடிக் கொடுக்கும் முடியுமோ அதை தரமாக செய்து காட்டி விட்டார்.

Also read: கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

இதுவரை மனதில் இருந்த பாரத்தை மொத்தமாக இறக்கி வைத்தபடி மாமியார் வாயை மூட வைத்து விட்டார். அடுத்தபடியாக குணசேகரனை தம்பிகள் இருவரும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். இவர் வீட்டிற்கு வந்ததும் இன்னும் என்னென்ன சம்பவங்கள் செய்ய போகிறாரோ என்பது சுவாரசியத்தை அதிகரிக்க செய்கிறது.

எப்படி பார்த்தாலும் இப்போதைக்கு அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் இன்னும் அடிமையாக தான் வாழ்க்கையே ஓட்டப் போகிறார்கள். ஏனென்றால் புதிய குணசேகரன் வந்திருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மருமகள்களை டம்மியாக தான் வைப்பார்கள். அந்த வகையில் மீண்டும் குணசேகரனிடம் அடிமை வாழ்க்கையை அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வாழப்போகிறார்கள். இது எந்த அளவிற்கு நாடகத்திற்கு விறுவிறுப்பை கொடுக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News