அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னா, பளிச்சுன்னு முத்தம் கொடுப்பேன்.. பரபரப்பை கிளப்பிய சன் டிவி சீரியல் நடிகை

Sun TV serial actress open talk: இப்போதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வரிசையாக வாய் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர், ‘பட வாய்ப்பு தருகிறேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னால் மாட்டேன்னு சொல்ல மாட்டேன். பளிச்சென்று முத்தம் கொடுத்து விடுவேன்’ எனக் கூறி சோசியல் மீடியாவை பரபரப்பாகி இருக்கிறார்.

சீரியல் என்றாலே அது சன் டிவி என்றாகி விட்டது. அந்த அளவிற்கு திரைப்படத்திற்கு நிகரான கதைகளை விதவிதமான சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி-ஐ தட்டி தூக்குகிறது. முன்பு திரைப்படங்களிலும் இப்போது சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை பாப்ரி கோஷ். இவர் பெங்காலி படத்தில் அறிமுகமாகி, அதன் பின் தமிழில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்தப் படங்களில் கவர்ச்சியை தாராளமாக காட்டிய இவர், பின்பு குடும்ப பாங்கான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். ஓய், சக்கை போடு போடு ராஜா, பைரவா, சர்கார், விஸ்வாசம் போன்ற படங்களிலும் சிறு சிறு கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்திலும் நடித்திருந்தார்.

Also Read: மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு

அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால், முத்தம் கொடுப்பேன்னு சொன்ன நடிகை

பின்பு பட வாய்ப்புகள் குறையவும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். நாயகி சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த இவர், சமீபத்தில் நிறைவடைந்த பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பின் இப்போது அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பிற சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அவரிடம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடக்கும் அட்ஜஸ்மென்ட் குறித்து செய்தியாளர் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பாப்ரி கோஷ், ‘அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால் தான் பட வாய்ப்பு என்று சொல்லும் நபரிடம் நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று தட்டி கழிக்க மாட்டேன். என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னவரின் வீட்டுக்கே சென்று அவருடைய குடும்பத்தினரின் முன்பே பளிச்சுன்னு அவருக்கு முத்தம் கொடுத்து விடுவேன்.

அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படி செய்தாய்? என கேட்பார்கள், அப்போது அவர்களிடம், ‘எனக்கு பட வாய்ப்பு தருவதாக சொல்லி படுக்கைக்கு அழைக்கிறார். அதனால் தான் உங்கள் முன்பு முத்தம் கொடுத்தேன்’ எனக் கூறுவேன். பின்பு அந்த நபரை அவர்களது குடும்பமே காரி துப்புவதுடன், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நல்லா கவனிச்சு அனுப்புவார்கள் என்று கூறினார். இவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: விஜயாவை ஆட்டிப்படைக்கும் பாட்டி.. கழுவுற தண்ணில நழுவுற மீனாக எஸ்கேப்பாகும் ரோகினி