ஸ்டைலிஷ் சாக்லேட் பாய் அரவிந்த்சாமிக்கு செட்டாகாத 4 படங்கள்.. சித்தார்த் அபிமன்யு வாங்கிய மரண மொக்கை

Stylish Chocolate Boy Arvindsamy’s 4 Unset Movies: தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைந்த படங்களை நடித்திருந்தாலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக வசீகரத் தோற்றத்துடன் பெண் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக அடையாளம் காணப்படுபவர் அரவிந்த்சாமி அவர்கள். ஸ்டைலிஷ் சாக்லேட் பாயாக வலம் வரும் அரவிந்த்சாமிக்கு சில கிராமத்து  மற்றும் சாமியார் கதைகள் செட்டாகாமல் போனது எனலாம்.

தேவராகம்: பரதன் இயக்கத்தில்1996 ஆண்டு அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் தேவராகம். இப்படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து புரட்சி பண்ணுகிறேன் என்ற பெயரில் புண்ணாகிப் போனார் அரவிந்த்சாமி.  வேதங்கள் கடைபிடிக்கும் பிராமணன் ஆகவும் இறுதிச் சடங்கிற்கு பின் காரியம் செய்பவராகவும் வந்து தோற்றத்திலும் திரைகதையிலும் செட்டாகாமல் போனார்.

தாலாட்டு: ரோஜா படத்தில் ஸ்டைலிஷ் ஹீரோவாக தோன்றிய அரவிந்த்சாமி  கிராமத்து சப்ஜெக்ட் ஆன தாலாட்டு படத்தில் குழந்தை கேரக்டரில்  அப்பாவியாக தோன்றி தமிழ் ரசிகர்களை ஏமாற்றி இருந்தார். கொங்கு தமிழில் சரிவர பேசி இருந்தாலும் அரவிந்த் சாமியின் தாலாட்டு என்னமோ மனதில் பதியாமலே போனது.

Also read: திருப்தி படுத்தாத சினிமா, 13 வருடத்தில் பல ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியை தூக்கி சாப்பிட்ட அரவிந்த்சாமி

புதையல்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் புதையல் படத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடி பண்ணுகிறோம் என்ற பெயரில் மொக்கை வாங்கிப் போனார் அரவிந்த்சாமி. இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் கழித்த பின்பு, அதே செல்வா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அரவிந்த்சாமி.

இந்திரா: சுஹாசினி இயக்கத்தில் அரவிந்த்சாமி அனுஹாசன் நடித்த திரைப்படம் இந்திரா. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க பெண்ணை மையமாக வைத்து இரு கிராமத்திற்கு இடையே ஜாதி ரீதியான பிரச்சனைகளை கையாண்டதில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் குறைவாக இருந்தது எனலாம். பெரிய அளவு வெற்றி பெறா விட்டாலும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது இந்திரா.

டாடி: குற்ற பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாடி என்கின்ற மலையாள திரைப்படத்தில் சுரேஷ்கோபி, கவுதமி மற்றும் அரவிந்த்சாமி நடித்திருந்தனர். குற்றவாளி, அவன் குற்றத்திற்கான பின்னணியையும் ஆராயும் படியாக அமைந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தது அரவிந்த்சாமிக்கு செட் ஆகாமல் போனது.

Also read: சத்யராஜின் 5 சூப்பர் ஹிட் படங்கள்.. நாகராஜ சோழனாய் மாறிய தேங்காய் பொறுக்கிய அமாவாசை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்