புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நான்காவது காதலரையும் கழட்டி விட்ட பிக்பாஸ் பிரபலம்.. என்ன லிஸ்டு நீண்டுட்டே போது!

Bigg Boss Actress: சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரேக் அப், விவாகரத்து என வெள்ளி திரையில் இருப்பவர்களுக்கே சமீப காலமாக பயங்கர டப் கொடுத்து வருகிறார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை திறந்தாலே இவர்களுடைய காதல் கதைகளும், பர்சனல் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் என்று தான் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இந்த லிஸ்டில் சேர்ந்து இருக்கிறார்.

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் நடிகை ஆயிஷா ஜீனத். இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனருக்கும் அவருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் அதிகம் இருந்ததால் அதை விட்டு விலகி சன் டிவியில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read:திருமணமான மைதா மாவை புரோட்டாவாக்க நினைத்த காமெடியன்.. உசுப்பேற்றி விட்ட ஹீரோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த சத்யா சீரியல் இவருக்கு மிகப்பெரிய பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. மேலும் இந்த நாடகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுவுடன் காதலில் இருப்பதாக செய்திகளும் அதிகமாக வெளியாகின. ஆயிஷா தரப்பில் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நடிகர் விஷ்ணு இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் ஆயிஷாவுக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் போது தான் டிக் டாக்கில் பேமஸ் ஆக இருந்தபோது ஒருவர் தன்னை தவறாக உபயோகித்து கொண்டார் என பகிரங்கமாக சொல்லி இருந்தார். ஆனால் ஆயிஷாவே வெளியில் வந்த பொழுது அவர் குற்றம் சுமத்திய அந்த நபரை ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி விட்டதாகவும் அதில் இரண்டாவது திருமணத்தை விவாகரத்து செய்யாமலே தன்னை காதலித்ததாகவும் பேசி இருந்தார்.

Also Read:பலான தொழிலுக்காகவே மகளை வளர்த்த தாய்குலம்.. நம்பியவர்களாலேயே மோசம் செய்யப்பட்ட நடிகை

மேலும் கனா காணும் காலங்கள், ஆபீஸ், சத்யா சீரியல்களில் நடித்த விஷ்ணுவுடன் ஆயிஷா லிவிங் டு கெதர்ரில் இருந்ததாகவும், தற்போது யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அந்த நபர் சொல்லியிருந்தார். ஆனால் ஆயிஷா இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் யோகேஸ்வரன் என்பருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவருடன் காதலில் இருப்பதை உறுதி செய்தார்.

இந்த நிலையில் தற்போது யோகேஸ்வரன் உடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார் ஆயிஷா. இதனால் அவர் தன்னுடைய நான்காவது காதலையும் பிரேக்கப் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆயிஷா தரப்பில் இதுவரை இதற்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

Also Read:எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ.. விவாகரத்து நடிகர் வலையில் சிக்கிய குடும்ப குத்து விளக்கு

- Advertisement -

Trending News