புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பொறுமையை சோதித்துப் பார்த்த வாத்தி.. இவ்வளவு நெகட்டிவ் விஷயங்களா!

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் வாத்தி திரைப்படம் இன்று பெரும் ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கிறது. சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இதன் மூலம் தனுஷ் தெலுங்கு திரையுலகில் படுமாசாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாகவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இப்படத்தில் அளவுக்கு அதிகமாக வீசும் தெலுங்கு நெடி தமிழ் ரசிகர்களை கொஞ்சம் அல்ல நிறையவே ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

அந்த வகையில் படத்தில் ஒரு சில நடிகர்களை தவிர மற்ற அனைவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தான். அந்த சில நடிகர்களும் தனுஷின் சிபாரிசின் பேரில் தான் இதில் நடித்திருப்பார்கள் போல் தெரிகிறது. இல்லை என்றால் இயக்குனர் தனுஷை தவிர மற்ற கேரக்டர்கள் அனைத்திற்கும் தெலுங்கு நடிகர்களையே தேர்ந்தெடுத்து இருப்பார்.

Also read: ஓவர் தெலுங்கு நெடி வீசும் வாத்தி.. தனுசுக்கு ஹிட் கொடுக்குமா.? முழு விமர்சனம்

அந்த அளவுக்கு இப்படம் தெலுங்கு படத்தை பார்க்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர்களின் உதடு அசைவு கூட தெலுங்கில் தான் இருக்கிறது. இதுவே அனைவருக்கும் ஏதோ டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற எண்ணத்தை தருகிறது. இதைக் கூட தாங்கிக் கொண்ட ரசிகர்களால் மற்றொரு விஷயத்தை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதாவது வாத்தி படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்று இருந்த வா வாத்தி என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. ஒருவகையில் அந்த பாடலுக்காகவே இப்படத்திற்கு சென்ற ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படி சென்ற ரசிகர்களுக்கு இயக்குனர் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறார். அதாவது அந்தப் பாடலில் ஹீரோயினின் உதடு அசைவு கூட தெலுங்கில் தான் இருக்கிறது.

Also read: வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

இதுதான் ரசிகர்களை இப்போது கடுப்பேற்றி இருக்கிறது. இதற்கு ஏன் தனுஷை ஹீரோவாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கும் தெலுங்கு நடிகரை வைத்து தெலுங்கிலேயே படத்தை இயக்கி இருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சாட்டை என்ற தமிழ் படத்தில் மாணவர்களின் நலனுக்காக சமுத்திரகனி பாடுபடுவது போல் அருமையாக நடித்திருப்பார்.

ஆனால் இப்படத்தில் அவர் அப்படியே கல்வியை வியாபாரம் ஆகும் வில்லனாக நடித்துள்ளதை பார்க்கும்போது என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கேட்க தான் தோன்றுகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி தனுஷ் ஒருவரே படத்தை தாங்கி நிற்கிறார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இதில் ஆடியன்ஸை கவரும் வகையில் சில விஷயங்கள் மிஸ் ஆகி இருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Also read: வாத்திக்கு போட்டியாக அழுத்தமான மெசேஜ் சொன்ன பகாசூரன்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News