படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இசைஞானி.. சாமியாரிடம் சரணடையும் தனுஷ்

Ilaiyaraja who shocked ilaiyaraja’s biopic the film crew: 80ஸ் காலகட்டங்களில் இருந்து இன்று வரை தமிழ் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போட்டு  வைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா.

தமிழ் திரை உலகத்துடன் அடிக்கடி ஏற்படும் சில முரண்பாடுகளால் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் இசைஞானியின், இசை பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களும் இன்ப துன்பங்களும் அதிகமாகவே உள்ளன.

திரை உலகினரால் சாமியார் என்று அழைக்கப்படும் இசைஞானியின், வாழ்க்கை வரலாற்றை படமாக  இயக்கும் முயற்சியில்  இறங்கியுள்ளார் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன்.

சாணிக்காயுதம் மற்றும் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இதனை இயக்க, இளையராஜாவாக நடிக்க உள்ளார் தனுஷ்.

சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் கதை விவாதத்தில் இருந்து துவங்கி காட்சியமைப்பு கதாபாத்திரங்கள் என அனைத்தும்இளையராஜாவின் அனுமதி பெற்ற பின்பே அரங்கேற உள்ளதாக தகவல்.

முதன்முறையாக இளையராஜாவிடம் ஏற்பட்ட பாசிட்டிவ் வைப்

தற்போது வரும் படங்களில் தனது பாடல்கள் மற்றும் இசையினை பயன்படுத்துவதை கடுமையாக மற்றும் முற்றிலும் எதிர்க்கும் இளையராஜா, இந்த படத்திற்கு தனது இசையில் உருவான பழைய பாடல்களையும் பின்னணி இசை அமைப்புகளையும் எடுத்துக் எடுத்துக் கொள்ளுமாறு அன்பு கட்டளை இட்டு உள்ளாராம். 

அதாவது அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பது போல் காட்சி அமைப்பு இருந்தால் அன்னக்கிளி படத்தின் பாடல்களை உபயோகித்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாராம்.

மேலும் தான் இசையமைத்த பாடல்களின் BGM களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பச்சைக் கொடி காட்டி உள்ளார். முதன்முறையாக இளையராஜாவிடம் ஏற்பட்ட இந்த பாசிட்டிவ் வைப் ஆல் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்  படக்குழுவினர்.

புதிதாக இசை அமைப்பு என்று இல்லாமல் இளையராஜாவின் பழைய படங்களின் இசை அமைப்புகளை மட்டுமே பயன்படுத்த உள்ளது இத்திரைப்படம். 

இதன் மூலம் இசையமைப்பாளரே இல்லாமல் உருவாகும் படமாக சாதனை படைக்க உள்ளது “இளையராஜா” திரைப்படம்.

இவை தவிர தனது டைரி குறிப்புகள் சிலவற்றையும் கொடுத்து, தனுசிடம் பல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.

Next Story

- Advertisement -