மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை.. சம்பளம் கொடுக்க துப்பு இல்ல, சிவகார்த்திகேயன் கூட்டாளியின் சர்ச்சை பேச்சு

Sivakarthikeyan: நேற்று சிவகார்த்திகேயனின் அயலான் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அந்த நிகழ்வில் பல சுவாரசியமான விஷயங்கள் இருந்தது. ஆனால் வழக்கம் போல அதில் சர்ச்சையை கிளப்பும் ஒரு விஷயமும் இடம்பெற்று இருந்தது.

அதாவது படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் அயலான் குறித்து பாகுபலி ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து பேசியிருந்தார். அதிலும் அயலான் ஏற்கனவே ஒரு பிளாக்பஸ்டர் படம் தான். நாங்கள் ஏலியனை நம்புகிறோம். பவுடர், ரத்த களரியான மேக்கப் போட்ட முகங்கள் என எதையும் நம்பவில்லை என கூறியிருந்தார்.

இதுதான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அயலான் இழுத்தடிக்கப்பட்டு வந்து இப்போதுதான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற விவகாரமும் வெளிவந்திருக்கிறது.

Also read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

பல வருடங்களாக கிடப்பில் கிடந்த இப்படம் வெளிவர பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனிடம் படம் வெளியாக வேண்டுமா அல்லது சம்பளம் வேண்டுமா என தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். அதை தொடர்ந்து அவர் இப்போதைக்கு சம்பளம் வேண்டாம் எனக் கூறி ரிலீஸ் ஏற்பாடுகளை பார்க்க சொல்லி இருக்கிறார்.

இதை சிவகார்த்திகேயனே தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அயலான் தயாரிப்பாளர் லோகேஷ், கமல் ஆகியோரை வம்புக்கு இழுப்பது போல் பேசி இருக்கிறார். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை என அவரின் திமிர் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also read: பவுடர், ரத்தக்களரி இல்லாத சினிமா.. லோகேஷ், நெல்சனை குத்தி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News