சிவகார்த்திகேயன், தனுஷ் எல்லாம் கத்துக்குட்டி.. தளபதி இடத்தை தொட கூட முடியாது, வெளுத்து வாங்கிய பிரபலம்

Sivakarthikeyan and dhanush are not reach Thalapathy’s place: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அடுத்து இரு படங்களில் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிரடியாக அறிவித்தார்.

சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் பல பேரின் வயிற்றில் புளியை தான் கரைத்தது. 

கொரோனா காலகட்டத்திற்குபின் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை காண தான் தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக வந்தனர்.

திரைத்துறைக்கு ஒரு திருப்பத்தை கொடுத்தது விஜய்யின் மாஸ்டர் தான் என்று தமிழ்நாடு திரையரங்க மூத்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், தளபதியின் புகழ் பாடினார்.

திருப்பூர் சுப்ரமணியம்

இப்பொழுது இவர், தமிழ் திரையுலகுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளையும், பிறமொழி படங்களின் தாக்கத்தால் தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையையும் வன்மையாக கண்டித்து பேசி உள்ளார்.

அதுமட்டுமின்றி தளபதி குறித்து திருப்பூர் சுப்ரமணியத்தின் தீப்பொறிக்கும் பேச்சானது வலைதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ஏற்கனவே தளபதி சினிமாவில் இருந்து விலகுவதை வன்மையாக கண்டித்த சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் வசூல் மன்னனான தளபதி எம்ஜிஆர் போன்று அரசியலிலும் கால் பதித்து, சினிமாவிலும் கலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தளபதி ரேஞ்சுக்கு யாரும் வரவில்லை

தற்போதும் சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விக்ரம் என அனைவரும் சமநிலையில் இருப்பதாகவும் இன்னும் தளபதி ரேஞ்சுக்கு யாரும் வரவில்லை என்று அதிரடியாய் பேசி உள்ளார்.

நடிப்பு, நடனம்,பாடல்,ஆக்சன், சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் திறமை என அனைத்தையும் திறம்பட செய்யும் தளபதியின் இடத்தை யாராலும் தொட முடியாது. 

இந்த இடத்தை எட்டுவது என்பதும் ஒரு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பல நல்ல தரமான படங்களை கொடுத்தே தீர வேண்டும். அதன் மூலம் மட்டுமே  தளபதி லெவலுக்கு வர முடியும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.

இவரது பேச்சு மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், வலைதளத்தில் நேரடியாக மோதவும் தொடங்கியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்