ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வரேன் சார் சொல்லிவிட்டு மறுநாள் தூக்கில் தொங்கிய சில்க்.. கண்கலங்கி பேசிய நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை தனது கவர்ச்சியால் அசரவைத்த நடிகை தான் சில்க் ஸ்மிதா. இவர் என்றுமே தனது நேர்த்தியான அழகால் பல படங்களில் கமிட்டாகி நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றவர். சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ நடிகர்கள் காத்திருந்த கதைகளும் உண்டு. அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவின் மரணம் பலரையும் கண்கலங்க செய்கிறது.

விஜயலக்ஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படத்தின் மூலமாக கவர்ச்சி நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த சில்க், எப்போதுமே தன்னை சுற்றி ஒரு வேலியை அமைத்துக்கொண்டே வாழ்வார். சில்க்கின் இயற்கையான கொஞ்சல் பேச்சால் மயங்கி போன பலரும் சில்க்கை அடைய நினைப்பார்கள்.

Also Read:சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

இதன் காரணமாக இவர் தன்னை திமிர் பிடித்தவராகவே, பார்க்கும் மற்றவர் கண்களுக்கு தெரிந்தார். அப்படி பல இன்னல்களை அசால்ட்டாக கடந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துக்கொண்டது தான் பலருக்கும் இன்று வரை அதிர்ச்சி எனலாம். அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக அவரது முகத்தை கடைசியாக பார்த்த நடிகர் கண் கலங்கி அண்மையில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்,நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் மனோபாலா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தனது சொந்தமான யூடியூப் சேனலில் சில்க் ஸ்மிதா பற்றி சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் சில்க் ஸ்மிதாவிற்கு சிறந்த கற்பனை திறன் இருந்ததாக தெரிவித்தார்.

Also Read: இந்த மாதிரி ஒரு சாவு சில்க் ஸ்மிதாவுக்கு வந்திருக்கக் கூடாது.. மன வேதனையில் ஓப்பனாக பேசிய கங்கை அமரன்

ஒருமுறை சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கில் இருந்த போது அந்த பகுதியில் சிலர், குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களை விற்றுக்கொண்டிருந்தார்களாம். அதை பார்த்த சில்க் ஸ்மிதா அவர்களிடம் சென்று சிறிய தோசைக்கல், கடாய் சட்டி எல்லாம் வாங்கி வந்தாராம். இதை ஏன் வாங்கியிருக்கிறாய் என மனோபாலா கேட்ட நிலையில் சிரிப்புடன் சென்ற சில்க் ஸ்மிதா, மறுநாள் தோசைக்கல்லை காதில் தோடாகவும், குட்டி சட்டியை இடுப்பில் அணிந்த பெல்ட்டுடனும் இணைத்து வந்து ஆச்சரியப்படுத்தினாராம்.

மேலும் பேசிய அவர், சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக தேம்பி, தேம்பி அழுதுக் கொண்டிருந்த நிலையில், எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்துவிட்டு நான் வரேன் சார் என கூறினார். ஆனால் மறுநாள் தூக்கிட்டு சடலமாக கிடந்தார் என்ற செய்தி தன்னை உருக்குலைய வைத்ததாக மனோபாலா உருக்கமாக தெரிவித்தார்.

Also Read: மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்

- Advertisement -

Trending News