அம்மா நடிகைகள் தான் டார்கெட்.. அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுக்கும் முதலாளிகள்

Gossip: தற்போது சினிமா துறையை பொருத்தவரையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு என்ற நிலை இருக்கிறது. இதில் இளம் நடிகைகளை விட வயதான நடிகைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக வாய்ப்பு தேடும் இளம் பெண்கள் இது போன்ற தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். அதேபோல் முன்னணியில் இருக்கும் நடிகைகளும் டாப் ஹீரோக்களுடன் நெருக்கத்தை வளர்த்து வருகின்றனர். அப்போதுதான் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் துணை நடிகைகளுக்கும் இதுபோல் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அம்மா நடிகைகளை தான் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் குறி வைக்கிறார்களாம். சமீபத்தில் கூட பிரபலமாக இருக்கும் அம்மா நடிகை ஒருவர் இந்த தொல்லையால் பாதிக்கப்பட்டார்.

சீனியர் நடிகைக்கு வரும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை

இதனால் அவர் சினிமாவே வேண்டாம் என்று ஓடும் அளவுக்கு விரக்தி அடைந்தார். அதேபோல்தான் தற்போது மற்றொரு சீனியர் நடிகைக்கும் இது போன்ற தொல்லை வந்து கொண்டிருக்கிறதாம்.

இதற்கு சம்மதித்தால் சகல வசதிகளையும் செய்து தருவதாக சில தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை காட்டுகிறார்களாம். ஆனால் இதெல்லாம் என்கிட்ட நடக்காது வாய்ப்பே இல்லை என்றாலும் பரவாயில்லை என அந்த சீனியர் நடிகை கோபத்தை காட்டியிருக்கிறார்.

இதனால் அவருக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்து வருகிறது. அதன் காரணமாகவே நடிகை இப்போது சின்னத்திரை பக்கம் தலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சமீபத்திய கிசுகிசு செய்திகள்

Next Story

- Advertisement -