சிவகார்த்திகேயன் போல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம்.. பழைய ரூட்டை கையில் எடுத்த கொடுமை

சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மாஸ் ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவெடுத்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் மிகுந்த பண நெருக்கடியில் தவித்தார். அதன் பிறகு டாக்டர், டான் என வெற்றி படங்களால் ஓரளவு கடனை சரிகட்டி மீண்டு வந்தார். இதே நிலைமை தான் தற்போது சந்தானத்திற்கும் வந்துள்ளது. அதாவது யார் பேச்சியோ கேட்டுக்கொண்டு நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்ற சந்தானம் அடம்பிடித்து நடித்து வருகிறார்.

Also Read : அக்கடதேசத்தில் துரத்தி விடப்பட்ட இயக்குனர்.. சிம்பு ரிஜெக்ட் செய்த கதையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

அதுமட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் சந்தானம் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இப்போது சந்தானமும் நிறைய கடன் பட்டு உள்ளாராம். இதை சரி கட்டுவதற்காக வேறு வழியில்லாமல் பழைய ரூட்டை மீண்டும் சந்தானம் கையில் எடுத்துள்ளார்.

அதாவது ஹீரோயிசம் தனக்கு செட்டாகாது என்பதால் மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் இப்போது காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோவாக நடித்து வருவதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து தான் மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்கலாம் என்ற முடிவெடுத்துள்ளார்.

Also Read : சமீபத்தில் சந்தானம் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிரிப்பே வரவழைக்காத காமெடி மூவிஸ்

முதலாவதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைல்கா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்த சுந்தர் சியின் அரண்மனை 4 படத்திலும் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி ஆகி உள்ளது.

இது தவிர இன்னும் இரண்டு மூன்று படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிக்க சந்தானம் இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்து வருகிறாராம். இதனால் மீண்டும் பழையபடி சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் கலக்க உள்ளார். இதை அறிந்த சந்தானத்தின் ரசிகர்கள் நல்ல முடிவு எடுத்துள்ளதாக மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

Advertisement Amazon Prime Banner