மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் அவருடைய நண்பரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது ரோகிணிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் மனோஜை அசிங்கப்படுத்தி விட்டார். அதே மாதிரி ரோகினி பேங்கில் 4 லட்ச ரூபாய் லோன் வாங்கி இருக்கிற விஷயமும் மனோஜ்க்கு தெரிந்து விடுகிறது.

இதனால் மனோஜ்க்கு, ரோகினி மீது சந்தேகம் வந்து இன்னும் எனக்கு தெரியாமல் என்னெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்கிறாய். அதற்கு ரோகிணி என்னுடைய பிரண்ட்ஸ்காகத் தான் நான் இந்த உதவியை பண்ணினேன். ஆனால் நீ உங்க அப்பா காசையே திருட்டுத்தனமாக எடுத்து செலவு செய்தாய் என்று அவமானப்படுத்தி விட்டார்.

இதனால் மனோஜ் கோபத்துடன் இருப்பதை தெரிந்து கொண்டு எப்படியாவது தன்னுடைய பக்கம் இழுத்து கோபத்தை போக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி, மனோஜ் வாங்கின 20000 ரூபாய் கடனை அடைத்து விடுகிறார். இது தெரியாத மனோஜ் அவருடைய நண்பரிடம் நான் கூடிய சீக்கிரத்தில் காசை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

Also read: ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

உடனே அவர் நீ அதெல்லாம் தர வேண்டாம் உன்னுடைய மனைவி எல்லா பணத்தையும் கொடுத்து விட்டார் என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட சந்தோஷத்தில் மனோஜ் வீட்டிற்கு போய் ரோகிணியை தூக்கி கொண்டாடுகிறார். அத்துடன் நான் தான் இந்த உலகத்திலே அதிர்ஷ்டசாலி நீ எனக்கு மனைவியாக கிடைத்தது நான் செய்த தவம் என்கிற மாதிரி புகழ்ந்து தள்ளுகிறார்.

அடுத்ததாக மீனா 500 மாலையை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதால் அவருக்கு தெரிந்த நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து மாலையை கட்டிக் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணினார். ஆனால் விஜயா என் வீட்டு வாசலில் யாரும் இப்படி கூடி இருந்து பண்ண கூடாது என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை, விஜயா சொல்றதும் கரெக்ட் தான். நீங்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே வந்து மாலையை கட்டுங்கள் என்று கூட்டிட்டு போகிறார்.

பிறகு விஜயா வீட்டுக்குள் இருந்து அனைவரும் மாலையை கட்டுகிறார்கள். இதன் மூலம் இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று விஜயாவுக்கு தெரிகிறது. அதனால் இப்படியே இந்த பூக்கரியை விட்டு விட்டால் ஓவராக ஆட்டம் போடுவாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனோஜிடம் சொல்லி புலம்புகிறார். அந்த வகையில் இதை கெடுக்கும் விதமாக ஏதாவது பிளான் பண்ணுவார். ஆனாலும் முத்து இதையெல்லாம் தகர்த்தெறிந்து மீனாவை ஜெயிக்க வைத்து விடுவார்.

Also read: ஓசிலையே கோடீஸ்வரி ஆகலாம்னு கனவு காணும் விஜயா.. கழுவுற தண்ணீல நழுவுற மீனாக எஸ்கேப் ஆகும் ரோகினி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்