செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஓசிலையே கோடீஸ்வரி ஆகலாம்னு கனவு காணும் விஜயா.. கழுவுற தண்ணீல நழுவுற மீனாக எஸ்கேப் ஆகும் ரோகினி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா வழக்கம் போல் பணம் என்றதும் வாயை பிளந்து ரோகிணியை டார்ச்சர் பண்ணி வருகிறார். ஆனால் இது ரோகினிக்கு தேவைதான். என்னமோ மலேசியாவே மொத்தமாக குத்தகை எடுத்தது போல் ஓவராக பில்டப் கொடுத்து மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார்.

அதனால் விஜயா, மனோஜ்க்கு அதன் மூலம் ஒரு விடிவு காலம் பிறந்து விட வேண்டும் என்று ரோகினிடம் சொந்தமாக பிசினஸ் பண்ணுவதற்கு உங்க அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடு என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதை கேட்டதும் ரோகிணி அவ்வளவு லட்சத்துக்கு நான் எங்க போக. எதுக்கெடுத்தாலும் பணம் என்றால் என்னிடம் வந்து என் மாமியார் கேட்டு உசுரை வாங்குது என்று புலம்பி வருகிறார்.

இதற்கிடையில் சுருதியின் அம்மா ரவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பிரச்சனை பண்ணியதால் அவருக்கு அங்கு அவமானம் ஏற்பட்டு விட்டது. இந்த கோபத்தால் வீட்டிற்கு வந்த ரவி, சுருதியிடம் உங்க அம்மா ஏன் என்னுடைய ஆஃபீஸ்க்கு வந்து என்னை அசிங்கப்படுத்த வேண்டும். எதுனாலும் வீட்டுக்கு வந்த பிறகு கூட பேசி இருக்கலாம்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

ஆபீஸ்க்கு வந்து என்னை அசிங்கப்படுத்தியது மட்டும் இல்லாமல் என் ஓனரிடம் திட்டும் வாங்கவும் வைத்து விட்டார். இனிமேல் உங்க அம்மா என்னுடைய விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்லிவிடு என கோபத்தில் சுருதியை திட்டி விடுகிறார். உடனே சுருதி இப்ப எல்லாம் ரவி எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் என்று வேதனையில் நொந்து போய்விட்டார்.

அடுத்தபடியாக ரோகிணி வீட்டில் நடந்த விஷயத்தை தோழியிடம் கூறி புலம்புகிறார். இதையெல்லாம் சரி பண்ண வேண்டும் என்றால் மனோஜ்க்கு கூடிய விரைவில் ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால் மாமியாரிடமிருந்து நான் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று ரோகினி கூறுகிறார். உடனே இவருடைய தோழியும் என்னுடைய ஆபீசில் ஏதாவது ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

அந்த வகையில் வழக்கம் போல ரோகிணி கழுவுற தண்ணில நழுவுற மீனாக ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே வருகிறார். இதனால் ஓசிலையே கோடீஸ்வரி ஆகி விடலாம் என்று கனவு காணும் விஜயா ஆசை கடைசி வரை நற்பாசையாக போய்விடும். அடுத்தப்படியாக முத்து ஆட்டோ தான் ஓட்டுகிறார் என்ற விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அதே மாதிரி ரோகினியும் சிட்டிபாபு விடம் கடன் வாங்க போகிறது முத்துவுக்கு தெரிந்து விடும். ஆக மொத்தத்தில் ரோகினி பற்றிய விஷயம் கூடிய விரைவில் வெளிவந்து விடும்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

- Advertisement -

Trending News