திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மகனின் இமேஜை டேமேஜ் பண்ணிய விஜயா.. கணவருக்காக மாமியாருக்கு சவுக்கடி கொடுத்த சுருதி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து வாங்கி கொடுத்த காண்ட்ராக்ட் படி மீனா 500 பூ மாலை கட்டிக் கொடுக்க வேண்டும். அதனால் அவருக்கு தெரிந்த தோழி அனைவரையும் வீட்டிற்கு வர சொல்லி ஒவ்வொருவரும் மாலை கட்டுகிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா வயிற்று எரிச்சலில் தவிக்கிறார்.

போதாக்குறைக்கு இவருடன் சேர்ந்து ரோகிணி மற்றும் மனோஜும் பொறாமையில் பொங்குகிறார்கள். அத்துடன் மீனாவுக்கு இதன் மூலம் இரண்டு லட்ச ரூபாய் கிட்ட பணம் கிடைக்கும் என்பதை விஜயா தெரிந்துகொண்டு வாயடைத்துப் போய் பார்க்கிறார். பிறகு ரவியும் சுருதியும் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் மீனாவுக்கு ஒரு மோட்டிவேஷன் பண்ணுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் சுருதி உதவி பண்ணுகிறேன் என்று மீனாவிடம் எப்படி மாலை கட்டிக் கொள்ள வேண்டும் என்று பக்கத்தில் இருந்து உதவி பண்ணுகிறார். இதை பார்த்ததும் விஜயா, ஸ்ருதியை கூப்பிடுகிறார். ஆனால் சுருதி விஜயாவை கண்டு கொள்ளாமல் மீனாவுக்கு பக்கபலமாக இருக்கிறார். அடுத்ததாக இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு வாங்குவதற்கு முத்து கிளம்புகிறார்.

Also read: மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

ஆனால் ரவி நானே வீட்டில் எல்லாத்துக்கும் பண்ணிக் கொடுக்கிறேன் என்று கிச்சடி செய்யப் போகிறார். அதற்கு விஜய் இவர்கள் அனைவருக்கும் பண்ணுகிற மாதிரி பொருட்கள் வீட்டில் கிடையாது என்று சொல்கிறார். உடனே முத்து, மனோஜை கடையில் போய் அனைத்து பொருட்களையும் வாங்க சொல்கிறார். அதற்கு ரோகினி ஏன் வீட்டுக்காரர் என்ன சின்ன பையனா அவரை போய் கடைக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்கிறார்.

உடனே முத்து அவன் சின்ன பையன்ல வெட்டிப் பையன் என்று வழக்கம்போல் அவருடைய தோரணையில் பதிலடி கொடுக்கிறார். பிறகு அண்ணாமலை ஆளுக்கு ஒரு வேலையாக பார்த்தால் தான் இதை சரியான நேரத்தில் பண்ண முடியும் என்று சொன்னதும் மனோஜ் வேறு வழி இல்லாமல் கடைக்கு போகிறார். அடுத்ததாக ரவி மற்றும் மீனாவின் தங்கை சீதாவும் ஜாலியாக பேசிக்கொள்கிறார்கள். இதை பார்த்து காண்டாகிய விஜயா, சுருதியை தனியா கூப்பிட்டு சீதாவின் தங்கையை பற்றி தவறாக பேசுகிறார்.

அத்துடன் ரவியுடன் இப்படி சிரிச்சு பேசிட்டு இருந்தால் பார்க்கிறவர்கள் ரவியை பற்றி தப்பாக பேசுவார்கள். அதனால் அந்த பூக்காரி தங்கை சீதாவிடம் ரவியை விலக்கி வை என்று கூறுகிறார். உடனே ஸ்ருதி அனைவரது முன்னாடியும் சீதாவும் ரவியும் பேசுவதை நீங்க தப்பாவா பாக்குறீங்க என்று பட்டுனு போட்டு உடைக்கிறார். பெத்த மகன் என்று கூட பார்க்காமல் ரவி இமேஜை டேமேஜ் பண்ணிய விஜயாவுக்கு சவுக்கடி கொடுத்து ஒரு பாடத்தை புகட்டிவிட்டார் சுருதி.

Also read: டாம் அண்ட் ஜெரியாக மாறி கொஞ்சும் முத்து மீனா.. வயிற்றெரிச்சலில் பொங்க போகும் ரோகிணி விஜயா

- Advertisement -

Trending News