ஆடியோ லாஞ்சில் தட்டி தூக்க இருக்கும் மாமன்னன்.. 2 பிரபலங்களை மடக்கி போட்ட ரெட் ஜெயண்ட்

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக ரிலீஸ் ஆக இருப்பது மாமன்னன். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் பேசும் இந்த படத்தில் அமைச்சராக இருக்கும் உதயநிதி நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்த படத்தில் அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்திருக்கின்றனர்.

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இவரை நகைச்சுவை வேடத்திலேயே பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த படத்தில் இவர் ஏற்ற நடிக்கும் சீரியஸான கேரக்டர் என்பது கொஞ்சம் வித்தியாசமானதாக தான் இருக்கும். இதை இயக்குனர் மாறி செல்வராஜை தன்னுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

Also Read:வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூன் ஒன்றாம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் வந்து முன்னணி ஹீரோவாக மாறினார். தற்போது இது இவருடைய கடைசி படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் இசை வெளியீட்டு விழா என்பது மிகப்பெரிய டிரெண்டாக மாறிவிட்டது. முன்பெல்லாம் சத்தமே இல்லாமல் ஏதாவது ஒரு அரங்கத்தில் இந்த விழாவை முடித்து விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இசை வெளியீட்டு விழா படத்தின் வெற்றி கொண்டாட்டம் என்பது போல் கொண்டாடப்படுகிறது. ரசிகர்களுக்கும் இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

Also Read:48 வருடங்கள், 350 படங்கள்.. 70 வயதிலும் நடிப்பை விடாத ரஜினி பட நடிகை

தற்போது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பயங்கரமாக திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி விழாவின் விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்களிடையே படத்திற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

சில மாதங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் இசையில் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பல வருடங்களுக்குப் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் ஒரே மேடையில் தங்களுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். தற்போது அதனை தொடர்ந்து மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிலும் இவர்கள் இரண்டு பேரையும் ஒரே மேடையில் ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள்.

Also Read:சூப்பர் ஸ்டார் இடத்திற்கு நடக்கும் போட்டா போட்டி.. சேட்டையை ஓரம் கட்டி பக்குவமாக மாறிய நடிகர்

Next Story

- Advertisement -