48 வருடங்கள், 350 படங்கள்.. 70 வயதிலும் நடிப்பை விடாத ரஜினி பட நடிகை

பொதுவாகவே நடிகைகள் சில காலங்களுக்கு பிறகு பெருமளவில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் 70 வயதாகும் ரஜினி பட நடிகை ஒருவர் 48 வருடங்களாக நடிப்பின் மேல் தீரா காதலுடன் இருந்து வருகிறார். அதனாலேயே அவர் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் சத்யபிரியா தான். அதில் குணசேகரனின் அம்மாவாகவும் 4 மருமகளுக்கு மாமியாராகவும் இவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதில் சில நேரங்களில் அமைதியாகவும் பல நேரங்களில் வில்லத்தனமாகவும் இவர் நடித்து வருவது வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

Also read: விரக்தியிலிருந்து மீண்டு வந்த விஜய் டிவி நடிகர்.. பாலா, புகழ் போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த காமெடியன்

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவருடைய கணீர் குரல் கதாபாத்திரத்திற்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இவர் அதிகபட்சமாக வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் பல திரைப்படங்களில் இவர் அம்மா கேரக்டரிலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதில் பாட்ஷா படத்தில் ரஜினிக்கு அம்மாவாக பாசிட்டிவ் கேரக்டரில் இவர் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்திலும் இவர் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

Also read: சூப்பர் ஸ்டார் இடத்திற்கு நடக்கும் போட்டா போட்டி.. சேட்டையை ஓரம் கட்டி பக்குவமாக மாறிய நடிகர்

இப்படி அனைத்து மொழிகளிலும் 350 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் 30க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதில் கோலங்கள் சீரியலில் அபியின் அம்மாவாக இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இந்த எதிர்நீச்சல் அவருக்கான அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது.

இப்படி நடிப்பு மட்டுமல்லாமல் சில படங்களுக்கு இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். அந்த வகையில் 70 வயதான போதும் இவர் அதே சுறுசுறுப்புடன் நடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தற்பொழுது இவருடைய சாதனையை பற்றி கேள்விப்பட்ட பலரும் கூகுளில் இவர் பற்றிய விவரங்களை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: தலைவரை கை விடாமல் காப்பாற்றிய நெல்சன்.. மொத்தமாய் ஆடிப்போன சன் பிக்சர்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்