வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தால் அவன் என் லவ்வரா? பிக் பாஸில் புது உருட்டை உருட்டும் ரவீனா

Bigg Boss Raveena : கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில தினத்திலேயே காரசாரமாக செல்கிறது. அதிலும் இந்த சீசனில் காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்டவர்கள் திடீரென்று அண்ணன், தங்கை என்று பெரிய குண்டை தூக்கி போட்டு விட்டனர்.

டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ரவீனா மணியின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டதும், கையைப் பிடித்து கடிப்பது, இழுத்துப் பிடித்து முத்தம் கொடுப்பது என இவர்களது அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. இதற்கு முன்பு ஆரவ்- ஓவியா, கவின்- லாஸ்லியா, அமீர்- பாவனி வரிசையில் இந்த சீசனின் காதல் ஜோடி மணி- ரவீனாஎன ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அதெல்லாம் கிடையாது.

Also Read: 3 பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சாதுரியமாக காய் நகர்த்தும் வனிதாவின் வாரிசு

நாங்க அண்ணன் தங்கச்சி என்று பாசமலர் கதையை தற்போது ரவீனா ஓட்ட ஆரம்பித்து விட்டார். இருக்கிற 18 போட்டியாளர்களின் சீக்கிரம் ரசிகர்களுக்கு பரீட்சையமாக வேண்டும் என்றால் கிசுகிசுப்பில் சிக்கினால் மட்டுமே முடியும் என்று, தொடக்கத்தில் மணியின் உடன் நெருக்கமாக பழகிய ரவீனா இப்போது அவரை அண்ணன் என திடீரென்று அழைத்து வருகிறார்.

இதை கேட்டதும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. ‘கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தால் அவன் என் லவ்வரா இருக்கிற அவசியம் இல்ல’ என்பது போல் ரவீனா நடந்து கொள்வதை பார்த்தால் அவர் 2k கிட்ஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.

Also Read: விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் பிளேபாயாக இருக்கும் மணி மீதம் இருக்கும் பெண் போட்டியாளர்களான பூர்ணிமா ரவி, ஐஷு, அனன்யா, ஜோவிகா என மீதம் இருக்கும் போட்டியாளர்கள் கொக்கி போடுவார். பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல இதற்கு முன்பு வெளியிலும் ரவீனா- மணி இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் தான் பழகுவார்கள்.

அப்போது கூட அவர்கள் அண்ணன், தங்கை என சொல்லிக் கொண்டது கிடையாது. ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டில் திடீரென ரவீனா மணியை அண்ணன் என அழைத்து புது உருட்டை உருட்டி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம்.. வெறுப்பை சம்பாதிச்சு முதல் ஆளாக வெளியேறும் போட்டியாளர்

- Advertisement -

Trending News