திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் மூன்று மாத காலமும் சோசியல் மீடியாக்களுக்கு ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். அதிலும் இந்த முறை இரண்டு வீடு, ஏகப்பட்ட ரூல்ஸ் என விஜய் டிவி வேற லெவல் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு சிலரை தவிர அனைவரும் பரிட்சயமான முகங்களாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது 18 போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த முறை பிக்பாஸ் கிள்ளி கொடுக்காமல் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் யாருக்கு குறைவான சம்பளம், யாருக்கு அதிகமான சம்பளம் என்பதை பற்றி இங்கு காண்போம்.

Also read: சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் கொளுத்தி போட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்.. ரெண்டே நாளில் எகிறப்போகும் டிஆர்பி

அதில் அனன்யா ராவ் ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வாங்குகிறார். இவருக்குத்தான் மிகவும் குறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் ராப் பாடகர் நிக்சன் ஆகியோருக்கு 13 ஆயிரம் பேசப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து அக்ஷயா, ஐஷு, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகியோருக்கு 15 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. மேலும் மாயா கிருஷ்ணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணிச்சந்திரா, ரவீனா ஆகியோருக்கு 18 ஆயிரம் ஒரு எபிசோடுக்காக பேசப்பட்டிருக்கிறது.

Also read: பத்த வச்ச பிக்பாஸ், பற்றி எரியும் வீடு.. வந்த வேலையை சிறப்பா ஆரம்பித்த கவின் கூட்டாளி

இவர்களுக்கு அடுத்தபடியாக பாரதி கண்ணம்மா புகழ் வினுஷா தேவி, கவின் நண்பர் பிரதீப் ஆகியோருக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் விஷ்ணு 25 ஆயிரமும், யுகேந்திரன் மற்றும் விசித்ரா ஆகியோர் 27 ஆயிரமும் சம்பளமாக பெறுகின்றனர்.

இவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு 28 ஆயிரம் ஒரு எபிசோடுக்காக பேசப்பட்டிருக்கிறது. இப்படியாக விஜய் டிவியின் மானமே உங்கள் கையில் தான் இருக்கு என 18 பேரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட்டிருக்கின்றனர். அந்த வகையில் கொடுத்த காசுக்கு மேல் இவர்கள் கூவுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம்.. வெறுப்பை சம்பாதிச்சு முதல் ஆளாக வெளியேறும் போட்டியாளர்

- Advertisement -

Trending News