சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

3 பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சாதுரியமாக காய் நகர்த்தும் வனிதாவின் வாரிசு

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக தொடங்கிய நிலையில் ரசிகர்கள் பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் கடந்த 6 சீசன்களில் இல்லாத பல புதிய விஷயங்களை இந்த சீசனில் கொண்டு வந்துள்ளார்கள். பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிந்து இருக்கிறது. அதில் தனியாக ஆறு பேர் ஸ்மால் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

மேலும் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இந்த சீசனில் பங்கு பெற்ற மூவருக்கு கிடைத்திருக்கிறது. அதாவது இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் சிபாரிசால் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அதிகம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

Also Read : சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் கொளுத்தி போட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்.. ரெண்டே நாளில் எகிறப்போகும் டிஆர்பி

அதன்படி ரக்ஷிதாவின் சிபாரிசால் வந்தவர்தான் நடிகர் விஷ்ணு. அதேபோல் வனிதா தனது மகள் ஜோவிகாவை சிபாரிசு செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார். மேலும் கவினால் பிக் பாஸ் வந்திருப்பவர் பிரதீப் ஆண்டனி. மேலும் அமீரை வளர்த்த குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார் ஐஷு.

இவ்வாறு விஜய் டிவி பிரபலங்கள் சிபாரிசு செய்தால் கண்டிப்பாக பிக் பாஸுக்குள் போய்விடலாம் என்பது இப்போது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளரான சம்யுக்தா பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னை விஜே பாவனா சிபாரிசு செய்ததால் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

Also Read : தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம்.. வெறுப்பை சம்பாதிச்சு முதல் ஆளாக வெளியேறும் போட்டியாளர்

இந்த சூழலில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர் இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார்கள். முந்தைய சீசனில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு நன்றாகவே இந்த வீடு பரிச்சயமாகி தான் இருக்கிறது.

அதாவது பிரதீப் ஆண்டனி, ஐசு மற்றும் ஜோவிகா மூவருமே பிக் பாஸ் வீட்டுக்கு முன்னதாக சென்று இருக்கிறார்கள். அதுவும் தனது மகளுக்கு அக்கு வேர் ஆணிவேராக பிக்பாஸ் நிகழ்ச்சியை புட்டு புட்டு வைத்திருக்கிறார் வனிதா. இதனால் ஜோவிகா சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறார். கண்டிப்பாக இவர் பைனலிஸ்டாக வருவார் என ரசிகர்கள் கனித்துள்ளனர்.

Also Read : முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் டம்மி பீஸ்.. நான் எந்த வம்பு தும்புக்கும் போகலயே, எப்புட்றா!

- Advertisement -

Trending News