திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

60 வயது நடிகருக்கு ஹீரோயினான பிக் பாஸ் ரட்சிதா.. என்னடா இது செல்லத்த இப்படி கொண்டு போய் விட்ருக்கீங்க

Ratchithaa Mahalakshmi: சில பேர் சீரியஸா ஏதாவது பண்ணா கூட சிரிப்பு வந்துடும். அந்த லிஸ்டில் தான் இப்போது சேர்ந்து விட்டார் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. ஒரு காலத்தில் விஜய் டிவி சீரியல்கள் மூலம் தமிழக மக்களால் ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டார். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இனி தமிழ் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என ஒதுங்கி விட்டார்.

அதன் பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரட்சிதா இப்போது வரை ட்ரோல் மெட்டீரியலாக கலாய்க்கப்பட்டு வருகிறார். அதிலும் கடந்த சீசனில் தினேஷ் பங்கு எடுத்த பிறகு, ரட்சிதாவுக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் ரொம்பவே அதிகரித்து விட்டன. விஜய் அவார்ட்ஸ் வாங்கிவிட்டு ஆஸ்கார் அளவுக்கு பில்டப் கொடுத்தது, தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இஷ்டத்திற்கு சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டது என அவருடைய பெயர் இப்போதைக்கு தமிழ்நாட்டில் கொஞ்சம் டேமேஜ் ஆகத்தான் இருக்கிறது.

அந்தப் படம் பெரிய அளவில் ரீச் ஆகாமல் போனதற்கு ரட்சிதாவும் ஒரு காரணம். பொதுவாக அதிக வயதுடைய ஹீரோக்களுடன் முன்னணி நடிகைகளே நடிப்பதற்கு யோசிப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் பிறகு இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியாது என்பதால் தான். அப்படி இருக்கும் பட்சத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்திலிருந்து 60 வயதான ஜக்கேஷ் என்பவர் உடன் இணைந்து நடித்திருக்கிறார் ரட்சிதா.

Also Read:மாடர்ன் குத்து விளக்காக மாறிய ரட்சிதா.. படு ஸ்டைலாக மாறி வெளியிட்ட புகைப்படம்

இருந்தாலும் ரட்சிதாவிற்கு தமிழ் படங்கள் இரண்டு கைவசம் இருக்கின்றன. கன்னட மொழி படங்களிலும் அவர் கமிட் ஆகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று ரட்சிதா மகாலட்சுமி ஹீரோயினாக நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது. அட சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு ஹீரோயின் அவதாரம் எடுத்துப் போய் இருக்கிறார், என்ன எந்த ஒரு செய்தியும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என நமக்கு தோணலாம்.

கன்னட நடிகர் ஜக்கேஷ் பெரும்பாலும் காமெடி நடிகர் ஆக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் எம்பி ஆகவும் பதவி வகித்து வருகிறார். இவருடன் மகாலட்சுமி இணைந்து நடித்த ரங்கநாயகா படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இருந்தாலும் பெரிய அளவில் ஒப்பனிங் இல்லாததால், படம் ரிலீஸ் ஆன சுவடு கூட தெரியாமல் இருக்கிறது.

பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர் ரட்சிதா. இப்போது அவர் சினிமாவுக்கு சென்றிருப்பது எல்லோருக்கும் பெருமைதான் என்றாலும், முதல் படத்திலேயே 60 வயது நடிகருடன் இணைந்து நடிக்கும் முடிவை எடுத்து அவசரப்பட்டு விட்டாரோ என இப்போது அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Also Read:சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சியாக மாறிய ரட்சிதா.. வைரலாகி வரும் புகைப்படம்

- Advertisement -spot_img

Trending News