சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஊர்ல எந்த பிரச்சனை நடந்தாலும் உருளுவது ரஜினியின் தலை தான்.. மகள்களால் மீண்டும் ஏற்பட்ட தலைவலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் அவருக்கென்று சேர்த்து வைத்த பெயரை அவருடைய மகள்களே கெடுத்து விடுகிறார்கள் என்பது கோலிவுட் வட்டாரத்தில் இருக்கட்டும், பொதுமக்களிடம் இருக்கட்டும், ஏன் அவருடைய ரசிகர்களே கூறும் குற்றச்சாட்டு. அதற்கேற்றார் போல் தான் அடுத்தடுத்த சம்பவங்களும் நடந்து வருகின்றன.

நேற்றைய தினம் நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது. தமிழகமெங்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக இந்த ரிலீஸ் கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also Read:ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் படம் பார்க்க அந்த திரையரங்கிற்கு சென்று இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய சமூக மற்றும் ஆடையை காரணம் காட்டி அந்த திரையரங்கில் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். இது நேற்றைய தினம் முதல் மிகப்பெரிய பரப்பரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விஷயம் வைரலானதும் திரையரங்கு சார்பில் இருந்து அந்த படம் யு/ ஏ சர்டிபிகேட் படம் என்பதால் குழந்தைகளுடன் வந்த அவர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தால் இவர்கள் விட்ட அறிக்கை அப்பட்டமான பொய் என்று தெரிய வந்திருக்கிறது.

Also Read:ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

அதே திரையரங்கில் நேற்றைய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தவிர அவருடைய மொத்த குடும்பமும் அதாவது ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவின் குழந்தைகள் முதல் கொண்டு பத்து தல திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர். யு /ஏ சர்டிபிகேட் என்ற காரணம் சொன்ன தியேட்டர் இவர்கள் இருவருடைய குழந்தைகளை மட்டும் எப்படி அனுமதித்தது என்று இப்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எங்கு எந்த பிரச்சினை நடந்தாலும் கடைசியில் உருளுவது என்னவோ சூப்பர் ஸ்டாரின் தலையாக தான் இருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தின் மக்களை அனுமதிக்காத தியேட்டரில் இவர்களுக்கு மட்டும் ராஜ மரியாதையா என்று வறுத்தெடுத்து வருகின்றனர் சமூக வலைத்தள வாசிகள். இவர்களுக்கு வேற தியேட்டரே இல்லை என்பது போல் இந்த தியேட்டருக்கு சென்று தற்போது ரஜினியை இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் உள்ளே இழுத்து விட்டு விட்டார்கள்.

Also Read:மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்.. மாஸாக வெளிவந்த அப்டேட்.!

- Advertisement -

Trending News