ரீ ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் 100 கோடி வசூல் படம்.. எல்லா இடத்திலும் தலைவர் கில்லி மாதிரி

சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதை கண்டுக்கவே இல்லை. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுத்திருக்காது. ஆனால் அது இந்த காலத்துக்கு ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சில படங்களில் மாற்றங்கள் வைத்து தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த படம் நடிகர்களுக்கு ஏற்ற படமாகவும் அந்த படத்தை இப்பொழுது வெளியிட்டால் அதன் மூலமும் லாபத்தை பெறலாம் என்று தயாரிப்பார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

அப்படிதான் சமீபத்தில் ரஜினியின் பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் எந்த நம்பிக்கையில் மறுபடியும் வெளியிட்டார்களோ அது பூர்த்தி செய்யப்படவில்லை. ஆனால் இதன் மூலமும் கொஞ்சம் லாபம் பார்த்திருக்க தான் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது மறுபடியும் ரஜினியின் ஒரு வெற்றி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read: ஏவிஎம் மியூசியத்தில் கெத்தாக நிற்கும் ரஜினி சிலை.. வருகை தந்து சிறப்பித்த கமல்

ஆனால் அது தமிழில் செய்யாமல் தெலுங்கில் முதல்முறையாக ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அது என்ன படம் என்றால் தமிழில் வெளியான சிவாஜி தி பாஸ் படம் தான். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக் நடிப்பில் 2007 இல் வெளியான படம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். ரஜினி இந்தப் படத்தின் மூலம் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஆனார்.

இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. மற்றும் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை பெற்று வணிகரீதியாக லாபத்தை பார்த்தது. இப்படம் ஏவிஎம் ப்ரொடக்ஷன்க்கு அதிக லாபத்தை கொடுத்தது. அத்துடன் இப்படத்தில் விவேக் மற்றும் ரஜினியின் காம்பினேஷன் நன்றாகவே ரசிக்கும்படியாக இருந்திருக்கும். அதிலும் இப்படம் அப்பவே மிகப்பெரிய ஹிட் ஆனது.

Also read: கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

தற்போது இந்த வெற்றி படத்தை வைத்து மறுபடியும் லாபத்தை பார்ப்பதற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் தெலுங்கு இயக்குனரை வைத்து படங்களை எடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அதனால் தான் என்னமோ ரஜினி புதுசாக படத்தை எடுத்து வெளியிடாமல் இவருடைய வெற்றி படத்தையே ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தலைவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது முதல்முறையாக தமிழ் படத்தை அங்கே ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் எல்லா இடத்திலும் கில்லி மாதிரி கலக்கப் போகிறார்.

Also read: லால் சலாம் மொய்தீன் பாய் கேரக்டர் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.. தனக்குத்தானே சூனியம் வைத்த ரஜினி

- Advertisement -spot_img

Trending News