23 நாட்களில் சூப்பர் ஹிட் கொடுத்த ரஜினி.. பஞ்சு அருணாச்சலத்திற்காக முத்துராமன் செய்த சாதனை

Rajinikanth: ஒரு ஹீரோ 23 நாட்கள் மட்டுமே கால்சீட் கொடுத்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டும் தான் நடக்கும். ரஜினி அப்போது ரொம்பவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் அவருக்கு ரிலீஸ் ஆகும். இருந்தாலும் அடுத்தடுத்த அவரை படங்களில் புக் செய்ய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்பார்கள்.

அப்படித்தான் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் 1988ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த வருடம் ரஜினி பயங்கர பிசி. தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்ததோடு, பிளட் ஸ்டோன் என்னும் ஆங்கில படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read:சிவகார்த்திகேயனை காப்பாத்த நங்கூரம் போல் நிற்கும் ரஜினிகாந்த்.. தலைவர் கட்டளைக்கு பம்மிய லோகேஷ்

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் வந்து கேட்டதும் ரஜினியால் மறுக்க முடியவில்லை. நான் ஒரு 15 நாள் கால்ஷீட் தருகிறேன், என்னை கெஸ்ட் ரோலில் வைத்து ஒரு படம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் இந்த விஷயத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் சொல்லி இருக்கிறார்.

ரஜினிக்கு வாக்கு கொடுத்த இயக்குனர்

எஸ் பி முத்துராமன் ரஜினியை சந்தித்து, நீங்க கொடுக்க சம்மதித்த 15 நாளோடு சேர்த்து 10 நாளை கொடுங்கள். 25 நாளில் நான் ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ரஜினி, அது எப்படி 25 நாளில் படம் எடுக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறார். சரி இயக்குனரின் இஷ்டத்திற்கு விட்டு விடுவோம் என்று நடிக்க சம்மதித்து விட்டார்.

ரஜினி கொடுத்த 25 நாளில், எஸ்பி முத்துராமன் 23 நாட்களிலேயே அவருடைய போர்ஷனை அழகாக எடுத்து முடித்து விட்டார். 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன குரு சிஷ்யன் தான் அந்த படம். எந்த தவறும் செய்யாமல் தூக்குத் தண்டனை கைதியாக இருக்கும் பாண்டியனை ரஜினி மற்றும் பிரபு இருவரும் இணைந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.

ரஜினி மற்றும் பிரபுவின் காம்போ இந்த படத்தில் வேற லெவல் ஹிட் அடித்தது. கௌதமி மற்றும் சீதா இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ரஜினி, பிரபு, மனோரமா கெமிஸ்ட்ரியில் உருவான காமெடி காட்சி இன்று வரை ரசிக்கப்படுகிறது.

Also Read:சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்