முதல் வரிசையில் சூப்பர் ஸ்டார்.. அயோத்தியில் ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

rajini
rajini

Rajinikanth : உத்திர பிரதேஷ் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் இன்று பிரான்ப் பிரதிஷ்டை விழா நடைபெறுவதால் இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ், நடிகை கங்கனா ரனாவத், நடிகை மற்றும் எம்பி ஹேமமாலினி போன்ற பிரபலங்கள் அயோத்தி விழாவில் கலந்து கொள்ள சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் ரஜினி அயோத்தி புறப்படும் போது செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள் இது, கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் இருந்த நிலையில், இப்போது ராமர் கோயிலை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று பெருமிதமாக ரஜினி பேசியிருந்தார்.

Also Read : 73 வயதிலும் ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. டிமாண்ட் வைக்கும் தலைவர், களத்தில் இறங்கும் உதயநிதி

எப்போதுமே படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது சரியான நேரத்திற்கு வரும் ரஜினி அயோத்தி விழாவிலும் முதல் ஆளாக கலந்து கொண்டு இருக்கிறார். அதுவும் அயோத்தி வாசிகளாக மாறி இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு கௌரவம் கொடுக்கும் வகையில் முதல் பரிசு வரிசையில் உள்ள இருக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எங்கு சென்றாலும் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் மரியாதையை நினைத்து அவரது ரசிகர்கள் உச்சி குளிர்ந்து உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்குபெறும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. மேலும் எக்ஸ் தளத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் ரஜினி இருக்கிறார்.

Also Read : ரஜினிக்கு வெள்ளையாக இருந்தால் பிடிக்காதா?. 73 வயதில் எனர்ஜியாக இருப்பதன் சீக்ரெட்

Advertisement Amazon Prime Banner