ரஜினிக்கு வெள்ளையாக இருந்தால் பிடிக்காதா?. 73 வயதில் எனர்ஜியாக இருப்பதன் சீக்ரெட்

The reason why Superstar Rajini is young at 73 years old: இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 73 வயதில் இவ்வளவு எனர்ஜி எப்படி என்று ரசிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை இவரைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். இதன் சீக்ரெட் என்ன என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வெள்ளையாக இருக்கக்கூடிய உணவு பிடிக்கவே பிடிக்காதாம். அதை சாப்பிடவே மாட்டாராம். அதாவது பால், தயிர், மோர், ஒயிட் சுகர், மைதா, ஒயிட் ரைஸ் இப்படி வெள்ளையாக இருக்கக்கூடிய எந்த உணவுப் பொருளையும் சாப்பிட மாட்டாராம். இதை பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்.

அதனால் தான் இப்ப வரை அவர் 73 வயதானவர் போல் தெரியாமல் இளசு போல் எனர்ஜித்துக்காக இருந்து, படங்களில் ஹீரோவாகவும் நடிக்க முடிகிறது. மேலும் ரஜினிக்கு மது அருந்துவது ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம். அவர் டிரிங்க்ஸ் பண்ண ஹோட்டலுக்கு போகும்போது கார்ல போவாராம். ஆனால் ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு போகும் வரும் போது நடந்து தான் வருவாராம்.

Also Read: சம்பளத்தை உயர்த்தி புது பார்முலா போட்ட சூப்பர் ஸ்டார்.. கெத்து குறையாமல் ரஜினி ஆடும் பேயாட்டம்

73 வயதில் ரஜினி இளமையாக இருப்பதற்கு காரணம்

மது அருந்தும் போது எந்த சைடு டிஷ்-யும் எடுத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல் குடித்துவிட்டு வயிறை காயப்போகவிடாமல், நன்றாக வயிற்றுக்கு சாப்பிடுவாராம். குடிப்பழக்கம் உடலுக்கு கேடு என்றாலும், அது ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைத்துள்ளார்.

இப்படி எல்லாம் செய்து இப்ப வரை உடம்பை சரியாக மெயின்டெயின் செய்து வருகிறார். அதனால் தான் 73 வயதிலும் அவரால் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க முடிகிறது. அது மட்டுமல்ல வெள்ளையாக இருக்கக்கூடிய பொருட்களை சாப்பிட வேண்டாம், குடிக்கு அடிமையாக வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார். இதை எல்லாம் செய்வதால் தான் ரஜினி இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார்.

Also Read: தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்