73 வயதிலும் ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. டிமாண்ட் வைக்கும் தலைவர், களத்தில் இறங்கும் உதயநிதி

Rajini Demand His Salary: ரஜினி சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 48 வருடங்கள் ஆகியிருக்கிறது. எப்படி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் மத்தியில் பெற்றாரோ, அதே மாதிரி தற்போது 73 வயது ஆகியும் என்னுடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும், அழகுக்கும் எந்தவித குறைச்சலும் இல்லை என்பதற்கேற்ப சூப்பர் ஸ்டார் ஆகவே ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

அதனால் தான் இப்பொழுது கூட இவருடைய படத்தை நான் நீ என்று போட்டி போட்டு வாங்கும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதுவும் கடந்த வருடம் ஜெயிலர் படம் 650 கோடி வசூலை சம்பாதித்த பிறகு இவருடைய மவுஸ் இன்னும் அதிகரித்து விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அடுத்ததாக தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார். ஏற்கனவே ரஜினி படம் என்றால் பெரிய அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் லோகேஷ் இன்னும் மெருகேற்றும் விதமாக அவருடைய கூட்டணி வைத்ததால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் என்னமோ ரஜினி தன்னுடைய சம்பளம் இதுதான் வேணும் என்று டிமாண்ட் பண்ணும் அளவிற்கு போய்விட்டார்.

Also read: ரஜினிக்கு வெள்ளையாக இருந்தால் பிடிக்காதா?. 73 வயதில் எனர்ஜியாக இருப்பதன் சீக்ரெட்

இதனை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜிடம் கதை கேட்டு ஓகே பண்ணி இருக்கிறார். இப்படத்தை தயாரிப்பதற்கு இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஒன்று ஐசரி கணேஷ் மற்றொன்று லலித். ஆனால் தற்போது இவர்களுக்கிடையே மூன்றாவது ஆளாக நான் இருக்கிறேன் என்று ரெட் ஜெயிண்ட் மூவிஸ் களத்தில் குதித்து இருக்கிறது.

இப்பொழுது எந்த படத்தையும் உதயநிதி விடுவதாக இல்லை. அந்த வகையில் இப்படத்தையும் வரிஞ்சு கட்டிக்கொண்டு தயாரிப்பதற்கு தயாராகி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ரஜினி, யாரு எனக்கு 210 கோடியை சம்பளமாக கொடுக்க தயாராக இருக்கிறீர்களோ, அவர்களுக்கு என்னுடைய டேட் கிடைக்கும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

அந்த வகையில் கண்டிப்பாக மாரி செல்வராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாக போகும் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் தயாரிக்கப் போகிறது. அப்படி மட்டும் ரஜினி கேட்டபடி அவருக்கு சம்பளம் கிடைத்துவிட்டால் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி முதல் இடத்தை பெற்று விடுவார்.

Also read: சன் டிவி தலையில் பாரத்தை இறக்கி வைத்த ரஜினி.. வேண்டா வெறுப்பாய் ஒப்புக்கொண்ட கலாநிதி

- Advertisement -spot_img

Trending News